ஆஸ்திரேலியாவின் ஸ்டார் வீரர் திடீர் ஓய்வு.. இனி பெரும் பின்னடைவு தான்.. உலகக்கோப்பையில் தப்புமா?
சிட்னி: ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும், முன்னணி பேட்ஸ்மேனுமான ஆரோன் ஃபிஞ்ச் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.
இதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 15 பேர் கொண்ட அணியை சமீபத்தில் அறிவித்திருந்தது.

ஆரோன் ஃபிஞ்ச் ஓய்வு
இந்நிலையில் அந்த அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முற்றிலும் விலகுவதாக முடிவெடுத்துள்ளார். இவரின் தலைமையில் ஆஸ்திரேலிய அணி வெற்றிகளை குவித்த போதும், ஃபிஞ்ச்-ஆல் பெரியளவில் சோபிக்க முடியவில்லை. தொடர்ச்சியாக சொதப்பி வருகிறார். இதன் காரணமாக அணியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார்.

ஓய்வு எப்போது
நாளை இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறும் ஃபிஞ்ச், வரும் டி20 உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் பெற்றுக்கொடுத்துவிட்டு, அதில் இருந்தும் விலகவுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கேற்றார் போலவே இந்த முறை ஆஸ்திரேலிய மண்ணில் உலகக்கோப்பை நடைபெறுகிறது.

கிரிக்கெட் பயணங்கள்
35 வயதாகும் ஆரோன் ஃபிஞ்ச் கடந்த 2011ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மட்டுமே ஸ்பெஷலிஸ்ட்டாக வலம் வந்த ஃபிஞ்ச்-க்கு 5 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுத்தது. அதுவும் அந்த 5 போட்டிகளும் இந்திய அணிக்கு எதிராக நடந்தவையாகும்.

ரெக்கார்ட்கள்
இதுவரை 145 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஃபிஞ்ச் 5401 ரன்களும், 92 டி20 போட்டிகளில் 2,855 ரன்களும் விளாசியுள்ளார். 5 டெஸ்ட் போட்டிகளில் 278 ரன்களையும் குவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகினாலும், ஐபிஎல் போன்ற உள்நாட்டு தொடர்களில் அவர் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications