
பாக், தொடர்
இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியாக வரும் அக்டோபர் 23ம் தேதியன்று பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இதனை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இருதரப்பு தொடர்களை நடத்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், 2023ல் எதிர்கார்க்கலாம் என்றும் தகவல் வெளியாகியிருந்தன.

பிசிசிஐ தந்த பதில்
இதற்கு பிசிசிஐ தற்போது பதில் கொடுத்துள்ளது. அதாவது இந்திய அணியின் அடுத்த 4 ஆண்டுகளுக்கான அட்டவணையில் பாகிஸ்தானுடனான தொடர் குறித்து எந்தவித அறிவிப்பும் இல்லை. இதுகுறித்து அனைத்து மாநில கிரிக்கெட் வாரியங்களுடன் சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய அரசின் விருப்பம் இல்லாமல் பாகிஸ்தானுடன் எந்தவித தொடரில் பங்கேற்பது குறித்தும் பரிசீலிக்கப்படாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பெரும் லாபம் மட்டும்
இனி வரும் ஆண்டுகளில் சிறிய நாடுளுடன் இருதரப்பு தொடர்களை நடத்துவது சரிவராது என முடிவெடுத்துள்ள பிசிசிஐ, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற பெரிய நாடுகளுடன் மட்டும் அதிகளவில் மோதுவதற்கு முடிவெடுத்துள்ளது. அதன்படி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இரு நாடுகளுடனும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நெடுந்தொடரை நடத்தவுள்ளனர். இதே போல ஒரு ஆண்டில் 3 ஒருநாள் ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளையும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

போட்டி விவரங்கள்
அடுத்த 4 ஆண்டுகளில் இந்திய அணி 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் 20 இந்தியாவிலும், 18 மற்ற நாடுகளிலும் ஆகும். 42 ஒருநாள் போட்டிகள் மற்றும் 61 டி20 போட்டிகளிலும் விளையாடவுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 163 போட்டிகள் நடந்த சூழலில் அடுத்த 4 ஆண்டுகள் 141 போட்டிகள் மட்டுமே உள்ளன. ஐபிஎல் மற்றும் ஐசிசி தொடர்களின் காரணமாக குறைக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications