Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இருவருக்கும் ஒரே அனுபவம்தான்.. ஹர்ஷல் - ஷமி விஷயத்தில் உள்ள சுவாரஸ்ய தகவல்.. பிசிசிஐ பலே திட்டம்!

மும்பை: டி20 உலகக்கோப்பை அணியில் ஷமியும் - ஹர்ஷல் பட்டேலும் ஒரே மாதிரியான அனுபவம் கொண்டவர்கள் என்ற சுவாரஸ்ய தகவல் தெரியவந்துள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடருக்காக ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்தது.

இதில் அணிக்கு திரும்புவார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ஷமி வெறும் பேக் -அப் வீரராக மட்டுமே சேர்க்கப்பட்டிருப்பது பேசுப்பொருளாகியுள்ளது.

ஒரே அனுபவம் தான்

ஒரே அனுபவம் தான்

தேர்வுக்குழு அதிகாரிகள் முகமது ஷமியை ஒதுக்கியதற்கு காரணம் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் காயத்தில் இருந்து மீண்டு வந்தது தான். குறிப்பாக ஷமியின் இடத்தை ஹர்ஷல் பட்டேல் தான் பிடித்துள்ளார். இவர்கள் இருவரில் யாருக்கு வாய்ப்பு தருவது என நீண்ட நேரம் ஆலோசனை நடந்துள்ளது. இதற்கு காரணம் இருவருக்குமே ஒரே மாதிரியான அனுபவமே உள்ளன.

அது எப்படி?

அது எப்படி?

முகமது ஷமிக்கு 32 வயது என்றால், ஹர்ஷல் பட்டேலுக்கும் 31 வயதுதான் ஆகிறது. இந்திய அணியில் நீண்ட காலமாக இருக்கும் ஷமி இதுவரை 17 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அதில் 18 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். கடந்தாண்டு இந்திய அணிக்காக அறிமுகமான ஹர்ஷல் பட்டேலும் 17 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். டி20 ரெக்கார்ட்களை பொறுத்தவரையில் ஷமியை விட ஹர்ஷல் முந்தியதால் தான் வாய்ப்பு கொடுத்துள்ளனர். ஆனால் இது இறுதி முடிவும் கிடையாது.

என்ன காரணம்

என்ன காரணம்

ஹர்ஷல் பட்டேல் இதுவரை எடுத்த விக்கெட்களில் பெரும்பாலும் ஸ்லோவான பிட்ச்-களிலேயே இருந்துள்ளது. அதாவது இந்தியா, அமீரகம் உள்ளிட்ட வேகம் குறைந்த சூழல்களில் எடுத்துள்ளார். அவரின் பந்துவீச்சில் பெரியளவில் வேகம் இருக்காது. வேரியேஷன்களை வைத்து தான் விக்கெட் எடுக்கிறார். ஆனால் உலகக்கோப்பை நடைபெறும் ஆஸ்திரேலிய களத்தில் நல்ல வேகமும், பவுன்ஸும் தேவை. இதனை அசால்டாக செய்யக்கூடியவர் தான் முகமது ஷமி.

முடிவு என்ன

முடிவு என்ன

இதன் காரணமாக இவர்கள் இருவரையுமே அடுத்து வரவுள்ள ஆஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்க தொடர்களில் சேர்த்துள்ளனர். இந்த 6 போட்டிகளில் இவர்களின் செயல்பாடுகளை வைத்து டி20 உலகக்கோப்பை அணியில் சேர்க்கப்படுவார்கள் என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Thursday, September 15, 2022, 9:30 [IST]
Other articles published on Sep 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+