Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“நேரடியாலாம் வாய்ப்பு தரமாட்டோம்.. முகமது ஷமிக்கு கடும் நிபந்தனை.. பிசிசிஐ எடுத்த முடிவின் பின்னணி

மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட முகமது ஷமிக்கு பிசிசிஐ முக்கிய கண்டிஷன்களை போட்டுள்ளது.

நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் வரும் நவம்பர் முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு குழப்பங்களும் எழுந்து வருகின்றன.

ஆஸ்திரேலிய பிட்ச்

ஆஸ்திரேலிய பிட்ச்

போட்டி நடைபெறும் ஆஸ்திரேலிய களம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமையும். கூடுதல் பவுன்ஸும் கிடைக்கும். இதனால் பவுலிங்கில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. காயத்தால் பாதிக்கப்பட்ட பும்ரா, ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பினர். இவர்களுடன் புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் இணைந்தனர். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ஷமி பேக் - அப் வீரராக மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்.

அதிகாரியின் விளக்கம்

அதிகாரியின் விளக்கம்

இதுகுறித்து விளக்கமளித்த அதிகாரி ஒருவர், அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் வெயில் காலமாக இருக்கும். எனவே அங்கு அனுபவ ஸ்பின்னரான அஸ்வினை கொண்டு செல்லலாம் என ரோகித் மற்றும் டிராவிட் கேட்டனர். அவரை சேர்த்ததினால் தான் ஷமிக்கு இடமில்லாமல் போனது. எனினும் அணியில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால், தீபக் சஹாருக்கு முன்னதாக ஷமி தான் அணிக்குள் வருவார்.

நிபந்தனை

நிபந்தனை

இந்நிலையில் மாற்று வீரராக அணிக்குள் நுழைய கூட ஷமிக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு டி20 உலகக்கோப்பைக்கு பின்னர் 10 மாதங்களாக டி20ல் விளையாடாமல் இருந்த வீரரை நேரடியாக அணிக்குள் சேர்த்துள்ளனர். எனவே அதற்கு சில விதிமுறைகள் உள்ளன. குறுகிய காலத்தில் ஷமி தன்னை நிரூபித்தால் மட்டுமே மாற்று வீரராக செல்ல முடியும்.

6 முக்கிய போட்டிகள்

6 முக்கிய போட்டிகள்

இந்தியா அடுத்ததாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுடனான டி20 தொடர்களில் மோதவுள்ளது. இந்த 6 போட்டிகளில் ஷமி தன்னால் முடிந்த அளவிற்கான சிறப்பை காண்பிக்க வேண்டும். அதனை வைத்து தான் அவரின் எதிர்காலம் முடிவெடுக்கப்படும் எனத்தெரிவித்துள்ளனர்.

நெடும் பயணம்

நெடும் பயணம்

இந்திய வீரர்கள் அடுத்த 14 நாட்களில் 6 போட்டிகளில் விளையாடவுள்ளனர். இதற்காக 8,800 கிமீ தூரம் பயணிக்க வேண்டும். இந்த குறுகிய பயணத்தில் காயம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆஸ்திரேலிய களத்தில் 23 போட்டிகளில் விளையாடியுள்ள ஷமி 53 விக்கெட்களை எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய இந்திய வேகப்பந்துவீச்சாளர் இவர் தான்.

Story first published: Saturday, September 17, 2022, 10:14 [IST]
Other articles published on Sep 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+