For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மருத்துவமனையில் முக்கிய வீரர்.. டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு பெரும் அடி..இந்தியாவுக்கு சாதகமா

லாகூர்: டி20 உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் வேளையில் பாகிஸ்தானுக்கு பெரும் அடி விழுந்துள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்கு தயாராவதற்கான கடைசி கட்ட போட்டிகளில் அனைத்து அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

பாகிஸ்தான் தொடர்

பாகிஸ்தான் தொடர்

ஒருபுறம் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடனான டி20 தொடரை கைப்பற்றிய சூழலில் அடுத்ததாக தென்னாப்பிரிக்க தொடரில் பங்கேற்கிறது. மற்றொரு புறம் இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியுடன் 7 டி20 போட்டிகள் கொண்ட நெடுந்தொடரில் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் தான் பெரும் பின்னடைவை பாகிஸ்தான் சந்தித்துள்ளது.

திடீர் பின்னடைவு

திடீர் பின்னடைவு

பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக பார்க்கப்படும் நஷீம் ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இங்கிலாந்து தொடரின் போது நசீம் ஷாவுக்கு தொடர்ச்சியாக உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. அவரை பரிசோதனை செய்து பார்த்தபோது காய்ச்சல் இருப்பதாகவும், ஆனால் அது சாதாரணமான ஒன்று அல்ல எனவும் கண்டறிந்தனர்.

 மருத்துவமனைக்கு விரைவு

மருத்துவமனைக்கு விரைவு

இதே போல இந்திய அணியில் ஆல்ரவுண்டர் தேர்வாக இருந்த தீபக் ஹூடாவுக்கும் கடைசி நேரத்தில் காயம் ஏற்பட்டு தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து விலகியுள்ளார். இவர்கள் இருவரும் டி20 உலகக்கோப்பை தொடருக்குள் முழு உடற்தகுதியுடன் வருவார்களா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை

நசீம் ஷா தீவிர காய்ச்சலால் ஒருவேளை பாதிக்கப்பட்டால், பாகிஸ்தான் அணிக்கு இங்கிலாந்து தொடர் மட்டுமின்றி டி20 உலகக்கோப்பையிலும் பெரும் பின்னடைவாகும். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வீரர் முழு உடற்தகுதியுடன் வருவாரா என்பது சந்தேகம் தான். எனவே இவர் இல்லாமல் பாகிஸ்தான் சமாளித்து ஆக வேண்டும். ஆசிய கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக நசீம் ஷா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, September 28, 2022, 16:50 [IST]
Other articles published on Sep 28, 2022
English summary
Big Blow for Pakistan team as Nasheem shah hospitalized ahead of T20 World cup 2022
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+