Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மொத்தம் 30 போட்டிகளின் ஆய்வு.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி திட்டம்.. கேப்டன் ரோகித் ஓபன் டாக்!

சிட்னி: டி20 உலகக்கோப்பை தொடர் திட்டம் குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இந்த போட்டி நாளை மதியம் 1.30 மணிக்கு மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடர்

டி20 உலகக்கோப்பை தொடர்

கடைசியாக 2007ம் ஆண்டு கோப்பையை வென்ற இந்திய அணி அதன்பின்னர் 15 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல காத்துக்கொண்டுள்ளது. எனவே இந்தாண்டு ரோகித் சர்மா தலைமையில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது. அதுவும் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடுவதால், கடும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரோகித் விளக்கம்

ரோகித் விளக்கம்

இந்நிலையில் இந்திய அணியின் திட்டம் குறித்து கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார். அதில், டி20 உலகக்கோப்பை தொடருக்காக மிகச்சிறப்பாக தயாராகியுள்ளோம். கடந்த சீசன் முடிந்ததில் இருந்து 30 போட்டிகளில் விளையாடி நிறைய வெற்றிகளை பெற்றுள்ளோம். இதன் மூலம் அணியில் இருந்த நிறைய பிரச்சினைகளை சரி செய்துள்ளோம் என நினைக்கிறேன்.

என்னென்ன தவறுகள்

என்னென்ன தவறுகள்

இந்த 30 போட்டிகளிலும் வீரர்கள் செய்த தவறுகள், பலமான இடங்கள் என நிறைய விஷயங்களை குறித்துவைத்துக்கொண்டு தயார் படுத்தியுள்ளோம். எனவே நல்ல நம்பிக்கை உள்ளது. இந்திய வீரர்களுக்கு அணி நிர்வாகம் முழு சுதந்திரத்தையும் கொடுத்துள்ளது. எந்த தவறை செய்தாலும் எங்களுக்கு அழுத்தம் கிடையாது என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

வீரர்கள் ஃபார்ம்

வீரர்கள் ஃபார்ம்

தொடர்ந்து வீரர்களின் நிலை குறித்து பேசிய அவர், இந்திய அணியில் அனைத்து 15 வீரர்களும் முழு உடற்தகுதியுடன் உள்ளனர். இந்தியாவின் பேட்டிங் மிகவும் அனுபவமானதாக உள்ளது. இதே போல பாகிஸ்தான் அணியில் பவுலிங் சிறப்பாக உள்ளது. எனவே தொடரின் முதல் போட்டியே மிகச்சிறந்ததாக இருக்கும் என நம்புகிறேன் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Story first published: Saturday, October 22, 2022, 14:49 [IST]
Other articles published on Oct 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+