Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டேவிட் வார்னருக்கா இந்த நிலைமை.. முதல் பந்திலேயே மோசமான சம்பவம்.. ரசிகர்கள் ஆச்சரியம் - வீடியோ!

மெல்பேர்ன்: நியூசிலாந்து அணியுடனான போட்டியில் டேவிட் வார்னருக்கு நடந்த சம்பவம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுகள் இன்று முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளது.

இன்று நடைபெற்ற முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணியும், நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். அந்த அணியில் தொடக்க வீரர்கள் ஃபின் ஆலன் 42 (16), டெவோன் கான்வே 92 (58) என அதிரடி காட்ட 20 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 200 ரன்களை குவித்தது.

 திணறிய ஆஸி

திணறிய ஆஸி

இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஓப்பனிங் வீரர்கள் டேவிட் வார்னர் 5 ரன்களுக்கும், ஆரோன் ஃபிஞ்ச் 13 ரன்களுக்கும் அவுட்டாகி ஏமாற்றினர். மிடில் ஆர்டராவது காப்பாற்றுமா என்று எதிர்பார்த்த நிலையில் மிட்செல் சாண்ட்னரின் பவுலிங்கில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். மிட்செல் மார்ஷ் (16), மேக்ஸ்வெல் (28), ஸ்டோய்னிஸ் (7), டிம் டேவிட் (11) என திணறினர்.

பழிதீர்த்த நியூசி,

பழிதீர்த்த நியூசி,

ஆஸ்திரேலிய அணியில் ஒரு வீரர் கூட நிலைத்து நின்று ஆடாததால் 17. 1 ஓவர்களில் அந்த அணி 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பெற்றது. கடந்த டி20 உலகக்கோப்பை தொடைரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் நியூசிலாந்து தோற்றிருந்தது. அதற்கு இந்தாண்டு முதல் போட்டியிலேயே நியூசிலாந்து பழிதீர்த்துள்ளது.

நியூசிலாந்து சாதனை

நியூசிலாந்து அணிக்கு இது ஒரு வரலாற்று வெற்றியும் ஆகும். ஏனென்றால் கடந்த 2011ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் ஒரு டி20 போட்டியில் கூட நியூசிலாந்து வெற்றி பெற்றதே கிடையாது. எனவே இன்றைய போட்டியின் மூலம் ஆஸ்திரேலியாவின் 11 ஆண்டு சாதனைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.

Story first published: Saturday, October 22, 2022, 16:41 [IST]
Other articles published on Oct 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+