
டாஸில் திட்டம்
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். பெர்த் மைதானம் வேகப்பந்துவீச்சை போலவே பேட்டிங்கிற்கும் நன்கு உதவும். எனவே கடினமான இலக்கை நிர்ணயிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முக்கியமான இந்த போட்டியில் ஒரே ஒரு முக்கிய மாற்றமாக அக்ஷர் பட்டேலை நீக்கியுள்ளார் ரோகித் சர்மா.

மாற்று வீரர் யார்
அக்ஷர் பட்டேலுக்கு மாற்று வீரராக தீபக் ஹூடா சேர்க்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க அணியில் 4 தரமான வேகப்பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள் என்பதால் இந்திய அணி தனது பேட்டிங் ஆழத்தை தீபக் ஹூடாவை வைத்து நீடித்துள்ளது. எதிரணியில் இடதுகை ஸ்பின்னர்கள் இல்லை என்பதால் இடதுகை பேட்ஸ்மேன் இங்கு தேவையில்லை.

எதிரணியிலும் ட்விஸ்ட்
இதே போல தென்னாப்பிரிக்க அணியிலும் ட்விஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த பல போட்டிகளில் சொதப்பி வரும் கேப்டன் தெம்பா பவுமா நீக்கப்பட்டு ரீசா ஹெண்ட்ரிக்ஸ் சேர்க்கப்படுவார் என தகவல் வெளியானது. அவர் 144 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அட்டகாச ஃபார்மில் உள்ளார். ஆனால் ஓப்பனிங்கில் எந்த மாற்றமுமே இல்லாமல் பந்துவீச்சில் மட்டும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஷாம்சி நீக்கப்பட்டு லுங்கி இங்கிடி சேர்க்கப்பட்டுள்ளார்.

ப்ளேயிங் 11 கணிப்பு
ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, அஸ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்


Click it and Unblock the Notifications











