தீபக் ஹூடா-க்கு வாய்ப்பு.. நட்சத்திர வீரர் நீக்கம்..தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய ப்ளேயிங் 11
பெர்த்: தென்னாப்பிரிக்கா அணியுடனான போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11 வேறு வழியே இன்றி ஒரே ஒரு மாற்றத்தை ரோகித் சர்மா செய்யவுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது 3வது போட்டியாக தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டி பெர்த்-ல் உள்ள மைதானத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்திலும், நெதர்லாந்து அணியை 56 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி அசத்திய இந்திய அணி, அதே புத்துணர்ச்சியுடன் தென்னாப்பிரிக்காவையும் எதிர்கொள்ளவுள்ளது.

மாற்றங்கள் என்ன?
குரூப் பி-கான புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து வருகிறது. இன்னும் ஒரே ஒரு வெற்றி பெற்றால் கூட அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். எனவே தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்துவதற்கான இந்தியா முனைப்பு காட்டுகிறது. ஆனால் கடந்த 2 போட்டிகளில் இருந்த ப்ளேயிங் 11 உடன் அதனை செய்வது சற்று கடினமான ஒன்றாகும்.

என்ன காரணம்
தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் வரிசையில் 4 இடதுகை பேட்ஸ்மேன்கள் மிகவும் பலமாக உள்ளனர். எனவே அஸ்வினை நீக்க முடியாது. ஆனால் தென்னாப்பிரிக்காவின் இடதுகை வீரர்களை சமாளிக்க அக்ஷர் பட்டேல் திணறியுள்ளார். அதாவது ஓவருக்கு 9 ரன்கள் வரை கொடுத்து வருகிறார். எனவே அக்ஷரை கொண்டு சென்றால் மிடில் ஓவர்களில் ரன்கள் எகிறும். இதனையடுத்து அக்ஷர் பட்டேல் கடந்த 2 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட போதும், இந்த ஒரு காரணத்திற்காக நீக்கப்படுவார்.

மாற்று வீரர் யார்?
மாற்று வீரராக தீபக் ஹூடா தான் சேர்க்கப்படவுள்ளார். பெர்த் மைதானத்தில் முழுக்க முழுக்க வேகப்பந்துவீச்சாளர்கள் தான் ஆதிக்கம் செலுத்துவார்கள். எனவே இங்கு சாஹலுக்கு 2 ஓவர்கள் தான் எப்படியும் கிடைக்கும். அந்த 2 ஓவர்களை ஹூடாவே வீச உதவுவார். இதுமட்டுமல்லாம் ரபாடா, ஆன்ரிக் நார்ட்ஜே போன்ற பவுலர்களை சமாளிக்க கூடுதல் பேட்ஸ்மேன் அணிக்கு தேவை என்பதால் ஹூடா உதவுவார்.

ப்ளேயிங் 11 கணிப்பு
ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, அஸ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்


Click it and Unblock the Notifications