இவருக்கா இந்த நிலைமை.. ரிஷப் பண்ட்-ஐ தினேஷ் கார்த்திக் முந்தியது இங்குதான்.. இனி வாய்ப்பு இல்லை??
மும்பை: டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் ரிஷப் பண்ட் தேர்வாவது கடினமான ஒன்று என தெரியவந்துள்ளது.
வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை சமீபத்தில் அறிவித்தனர்.
ஆசிய கோப்பை தோல்விக்கு பிறகு பிசிசிஐ எடுத்துள்ள முடிவுகள் மீண்டும் ரசிகர்களுக்கு குழப்பத்தையே தான் உண்டாக்கியது.

இந்திய அணி அறிவிப்பு
அணி தேர்வில் மிகப்பெரிய பிரச்சினை தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் ஜோடி தான். ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக சென்றது இவர்களில் யாரை தேர்வு செய்யலாம் என குழம்பியது தான். தினேஷ் கார்த்திக் வாய்ப்பு பெற்ற 2 போட்டிகளிலும் இந்தியா வென்றுவிட்டது. ஆனால் பண்ட் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் ஒன்றை கூட சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

அடிச்சது லக்
இந்நிலையில் தான் இவர்கள் இருவரையுமே மீண்டும் டி20 அணிக்காக எடுத்துள்ளனர். ஆனால் இந்த முறை தினேஷ் கார்த்திக் ப்ளேயிங் 11ல் இருக்கப்போகிறார் என்பதை முன்பே உறுதி செய்துவிட்டனர். ரிஷப் பண்ட்-ன் நிலை என்ன என்பது அணியின் காம்பினேஷன்களை பொறுத்து தான் அமையும். ஏனென்றால் அவர் எங்கு தான் சிறப்பாக விளையாடுவார் என்ற சந்தேகம் உள்ளது.

என்ன காரணம்
கடந்த சில மாதங்களாக தினேஷ் கார்த்திக் ஃபினிஷர் என்ற முத்திரையை பதித்துவிட்டார். ஆனால் ரிஷப் பண்ட் ஓப்பனிங், 3வது இடம், 5வது இடம் என மாற்றி மாற்றி களமிறங்கி வருகிறார். ஆனால் அவரால் எதிலுமே பெரிதாக சோபிக்க முடியவில்லை. இருப்பினும் அவரை இன்னமும் நம்புவது ஒரே ஒரு விஷயத்திற்காக தான்.

இடதுகை பேட்ஸ்மேன்
இந்திய டி20 அணியில் தற்போதைக்கு ரவீந்திர ஜடேஜாவை விட்டால், இடதுகை பேட்ஸ்மேன் என இருப்பது ரிஷப் பண்ட் மட்டும் தான். மிடில் ஓவர்களில், இடது - வலது காம்போவிற்காக கண்டிப்பாக ஒரு இடதுகை பேட்ஸ்மேன் தேவை என்பதால் அவரை வைத்துள்ளனர். அதற்கும் தற்போது அக்ஷர் பட்டேல் வந்துள்ளதால் டி20 உலகக்கோப்பை ப்ளேயிங் 11ல் பண்ட் இருப்பது மிகவும் கடினமான ஒன்று தான் என தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications