Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நம்ம விராட் கோலியா இது??.. பாகிஸ்தான் போட்டியில் 2 பெரும் சம்பவங்கள்.. ரசிகர்கள் அதிர்ச்சி - விவரம்

மெல்பேர்ன்: பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி 2 பெரிய வாய்ப்புகளை தவறவிட்டது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மெல்பேர்னில் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஓப்பனிங்கே சொதப்பல் தான்.

 தரமான பவுலிங்

தரமான பவுலிங்

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் பாபர் அசாம் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். மற்றொரு ஓப்பனரான முகமது ரிஸ்வானும் 4 ரன்களுக்கு நடையை கட்டினார். இவர்கள் இரண்டு விக்கெட்களையும் இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் தனது முதல் 2 ஓவர்களிலேயே கைப்பற்றி அசத்தினார்.

கோலி சொதப்பல்

கோலி சொதப்பல்

இந்நிலையில் இந்திய அணிக்கு தொடக்கம் சிறப்பாக இருந்த போதும், விராட் கோலி செய்த விஷயங்கள் ரசிகர்களை சோகமாக்கியது. ஆட்டத்தின் 2வது ஓவரில் அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தை ஷான் மசூத் எதிர்கொண்டார். அந்த பந்தை அருகிலேயே அடித்துவிட்டு, மசூத் சிங்கிள் ஓட முயல, பந்து நேராக விராட் கோலியின் கைக்கு சென்றது.

மிஸ்ஸான ரன் அவுட்

மிஸ்ஸான ரன் அவுட்

ஸ்டம்ப்களுக்கு மிகவும் அருகில் இருந்த விராட் கோலி, நல்ல வாய்ப்பு இருந்த போதும், ரன் அவுட்டாக்க தவறவிட்டார். இந்தியாவின் சிறந்த ஃபீல்டரான அவர், தவறாக த்ரோ செய்தது ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுத்தது. இதோடு விராட் கோலியின் ஃபீல்டிங் சொதப்பல் நிற்கவில்லை. அர்ஷ்தீப்பின் அடுத்த ஓவரிலும் சொதப்பினார்.

2வது சொதப்பல்

2வது சொதப்பல்

4வது ஓவரில் அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தை முகமது ரிஸ்வான் தூக்கி சிக்ஸருக்கு அடிக்க முயன்றார். மிட் ஆன் திசையில் நின்றிருந்த விராட் கோலியை நோக்கி தான் அந்த பந்து சென்றது. ஆனால் விராட் கோலி இன்னும் சிறிது உள்ளே வராததால் பந்து முன்கூட்டியே விழுந்து கேட்ச் மிஸ்ஸானது.

Story first published: Sunday, October 23, 2022, 15:31 [IST]
Other articles published on Oct 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+