Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“தினேஷ் கார்த்திக் வேண்டவே வேண்டாம்”.. கவுதம் கம்பீர் கருத்தால் ரசிகர்கள் ஷாக் - அப்படி என்ன காரணம்?

மும்பை: தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு தரக்கூடாது என்பது போல முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பேசியுள்ளார்.

Recommended Video

T20 Cricketல வெறும் 10 ball விளையாடி அவுட் ஆகுற ப்ளேயர் எனக்கு வேண்டாம் - Gautam Gambhir

டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு குழப்பங்கள் சமூக வலைதளங்களில் சுற்றி வருகின்றன.

டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை

இதில் மிகவும் முக்கியமான ஒன்று ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் பிரச்சினை தான். இவர்கள் இருவரில் யாரேனும் ஒருவருக்கு மட்டுமே ப்ளேயிங் 11ல் வாய்ப்பு தர முடியும். தினேஷ் கார்த்திக் தனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்பையும் பயன்படுத்துகிறார். ஆனால் இடதுகை வீரர் என வாய்ப்பு பெறும் பண்ட், சொதப்பிவிடுகிறார். இதுதான் ஆசிய கோப்பையில் நடந்தது.

மீண்டும் ஒரே குழப்பம்

மீண்டும் ஒரே குழப்பம்

இந்நிலையில் டி20 உலகக்கோப்பையிலும் இருவரில் யாருக்கு தான் வாய்ப்பு என்ற குழப்பம் எழுந்துள்ளது. ஜடேஜாவுக்கு மாற்றாக மற்றொரு இடதுகை ஆல்ரவுண்டர் அக்‌ஷர் பட்டேல் கொண்டு வரப்பட்டுள்ளதால், தினேஷ் கார்த்திக்கிற்கு தான் வாய்ப்பு கொடுக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

 கவுதம் கம்பீர் பேச்சு

கவுதம் கம்பீர் பேச்சு

இந்நிலையில் பண்ட்-க்கு ஆதரவாக கவுதம் கம்பீர் களமிறங்கியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக்கை ஒரே அணியில் விளையாட வைக்க முடியாது. அப்படி நடந்தால் 6வது பவுலர் இன்றி இந்தியா விளையாட வேண்டியிருக்கும். இல்லையென்றால் கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாரேனும் ஒருவரை நீக்கிவிட்டு, பண்ட்-ஐ ஓப்பனிங்கில் ஆட வைக்கலாம் இதுதான் ஒரே வழி.

 பண்ட் தான் வேண்டும்

பண்ட் தான் வேண்டும்

ஒருவருக்கு தான் வாய்ப்பு என்றால், பண்ட்-க்கு தான் தர வேண்டும். ஏனென்றால் டாப் ஆர்டரில் விளையாட வேண்டிய தேவை இருந்தாலும் கூட தினேஷ் கார்த்திக் அதற்கு ஆர்வம் காட்டவில்லை. ஆனால் பண்ட் ஓப்பனிங், மிடில் ஆர்டர், லோயர் ஆர்டர் என அனைத்து இடத்திலும் விளையாடுகிறார். விக்கெட் கீப்பர் டாப் ஆர்டரில் விளையாடும் நம்பிக்கை வேண்டும். அது பண்ட்-யிடம் பார்த்தேன். எனவே அவருக்கு தான் வாய்ப்பு தர வேண்டும் என கம்பீர் கூறியுள்ளார்.

Story first published: Saturday, September 17, 2022, 18:38 [IST]
Other articles published on Sep 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+