Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

6 அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்பு.. அதுவும் ஒரே குரூப்பில் இருந்து.. மழையால் ஏற்பட்ட சுவாரஸ்யம்!

மெல்பேர்ன்: டி20 உலகக்கோப்பை தொடரில் 6 அணிகளுக்கும் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு சம அளவில் இருப்பதால் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வரும் நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பு கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணியும் தங்களது லீக் சுற்றின் இறுதிகட்டத்தை நெருங்கி வருகின்றன.

2 குரூப்களாக நடைபெற்று வரும் லீக் சுற்று வரும் நவம்பர் 6ம் தேதி முடிவடையவுள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு குரூப்பிலும் இருந்து 2 அணிகள் தேர்வு செய்யப்பட்டு வரும் நவம்பர் 9ம் தேதி முதல் அரையிறுதி சுற்று தொடங்கவுள்ளது.

லீக் போட்டிகள்

லீக் போட்டிகள்

குரூப் பி பிரிவில் நெதர்லாந்து, பாகிஸ்தான் அணிகள் தொடர் தோல்விகளை பெற்றதால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு குறைந்துள்ளது. மற்றொருபுறம் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் அரையிறுதி சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன.

6 அணிகளுக்கும் வாய்ப்பு

6 அணிகளுக்கும் வாய்ப்பு

இந்நிலையில் குரூப் ஏ பிரிவில் தான் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு அணியும் தலா 3 போட்டிகளில் விளையாடிவிட்ட போதும், 6 அணிகளுமே அரையிறுதி செல்வதற்கான வாய்ப்பு பலமாக உள்ளது. இதற்கு காரணம் மழைப்பொழிவு தான். இந்த குரூப்-ன் முக்கியமான 3 போட்டிகள் மழையின் காரணமாக முற்றிலும் ரத்து செய்யப்பட்டுவிட்டன.

புள்ளிப்பட்டியல்

புள்ளிப்பட்டியல்

போட்டிகள் ரத்தானதால் இரு அணிகளுக்கு புள்ளிகள் பிரித்து தரப்பட்டன. அந்தவகையில் நியூசிலாந்து, இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலிய அணிகள் 3 புள்ளிகளுடன் உள்ளன. மீதமுள்ள இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் தலா 2 புள்ளிகளுடன் இருக்கின்றன. இதில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளை தவிர மற்ற அனைத்து அணிகளுமே 3 போட்டிகளில் விளையாடிவிட்டன.

 கடுமையான போட்டி

கடுமையான போட்டி

6 அணிகளுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான புள்ளிகளுடன் உள்ளதால், முதல் இரண்டு இடங்களை பிடித்து அரையிறுதிக்கு செல்வது யார் என்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மழையின் தாக்கம் இனியும் தொடரும் என்பதால் அனைத்து அணிகளும் இனி கிடைக்கும் போட்டிகளில் ரன் ரேட்டை உயர்த்தியே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Story first published: Friday, October 28, 2022, 18:44 [IST]
Other articles published on Oct 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+