“2 அதிரடி முடிவுகளை எடுத்தே தீரனும்.. இல்லைனா”.. இந்தியாவின் அடுத்த போட்டி.. ஹர்பஜன் எச்சரிக்கை!
மும்பை: இந்திய அணி இனி வெற்றி பெற வேண்டும் என்றால் இரண்டு பெரிய முடிவுகளை கண்னை மூடிக்கொண்டு எடுக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரை வெற்றிகரமாக தொடங்கிய இந்திய அணிக்கு திடீரென சறுக்கல் ஏற்பட்டுள்ளது. முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணியை வீழ்த்திய போதும், 3வது போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் தோற்றது.
இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 133 ரன்கள் குவிக்க, பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா 19.4 ஓவர்களிலேயே 5 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை எட்டி வெற்றி கண்டது.

இந்திய ப்ளேயிங் 11
இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி புள்ளிப்பட்டியில் 4 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு சென்றுள்ளது. அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்றால் மீதமுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே முடியும் என்ற சூழல் உள்ளது. எனவே அணியில் நடந்த தவறுகளை சரி செய்துக்கொண்டு அடுத்த போட்டியில் இந்திய அணி களமிறங்க வேண்டும்.

பண்ட் கம்பேக்
இந்நிலையில் அந்த மாற்றங்கள் குறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் அட்வைஸ் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், இந்திய அணியில் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். கே.எல்.ராகுல் ஒரு சிறந்த வீரர் தான். ஆனால் அவரின் ஃபார்ம் தற்போது மோசமாக உள்ளது என்பதை அறிவோம். எனவே ராகுலை நீக்கிவிட்டு, ரிஷப் பண்ட்-ஐ ஓப்பனிங்கிற்கு கொண்டு வர வேண்டும்.

தினேஷ் வேண்டாம்
தினேஷ் கார்த்திக் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் நிலை என்னவென்றே தெரியவில்லை. இப்படி இருக்கையில் பண்ட்-ஐ ஓப்பனிங் ஆட வைத்துவிட்டு, தினேஷ் கார்த்திக் இடத்திற்கு தீபக் ஹூடாவை கொண்டு வர வேண்டும். இதன் மூலம் இடது - வலது காம்பினேஷனும் கிடைக்கும், ஹூடா மூலமாக ஒரு கூடுதல் பவுலரும் கிடைப்பார்.

சாஹலுக்கு வாய்ப்பு
இதே போல ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு மாற்றாக யுவேந்திர சாஹல் கொண்டு வர வேண்டும். தென்னாப்பிரிக்க போட்டியில் அஸ்வினின் தவறு தான் பாதிப்பை ஏற்படுத்தியது. யுவேந்திர சாஹல் சில ரன்களை விட்டுக்கொடுத்தாலும் அவர் தேவையான விக்கெட்களை எடுத்துவிடுவார். எனவே அவரை கொண்டு வர வேண்டியது அவசியம் என ஹர்பஜன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications