Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி சொன்ன அந்த ஒரு அட்வைஸ்.. இன்று வரை கடைபிடிக்கும் ஹர்திக் பாண்ட்யா.. சக்ஸஸ் குறித்து ஓபன் டாக்!

பிரிஸ்பேன்: தோனி சொன்ன ஒரே ஒரு வரி அட்வைஸ் தான் இன்று வரை உதவுவதாக ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை வரும் அக்டோபர் 23ம் தேதி எதிர்கொள்கிறது.

15 ஆண்டுகள் கழித்து மீண்டும் கோப்பையை பெறுவதற்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டி20 உலகக்கோப்பை தொடர்

டி20 உலகக்கோப்பை தொடர்

இந்திய அணியில் இந்தாண்டு பல வீரர்களும் கம்பேக் கொடுத்திருப்பது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. இதில் முக்கியமான ஒருவர் ஹர்திக் பாண்ட்யா ஆகும். கடந்தாண்டு டி20 உலகக்கோப்பையில் முழுமையாக உடற்தகுதி பெறாமல் சொதப்பிய பாண்ட்யா, இந்தாண்டு அட்டகாசமான ஃபார்மில் வந்துள்ளார். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டுமே அதிவேகமாக இருக்கிறது.

ஹர்த்திக்கின் பேச்சு

ஹர்த்திக்கின் பேச்சு

இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பையை எதிர்கொள்வது குறித்து பாண்ட்யா வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர், என் உடற்தகுதி நன்றாக முன்னேறியுள்ளது. என்னைப் பொறுத்தவரையில் எத்தனை ரன் அடிக்கிறேன் என்பது எனக்கு முக்கியமல்ல, எந்த சூழலில் எப்படி செயல்படுகிறேன் என்பதே எனக்கு முக்கியம். இதற்காக தோனி சொன்ன ஒரு அட்வைஸை தான் இன்று வரை பின்பற்றுகிறேன்.

தோனியின் அட்வைஸ்

தோனியின் அட்வைஸ்

ஒருமுறை தோனி என்னிடம், " ஸ்கோர் போர்டை பார்த்து, அதற்கேற்ப விளையாடு, அணிக்கு தேவை என்னவென்பது அப்போது தான் தெரியும், உனக்கு தோனும்படி விளையாடாதே" எனக் கூறினார். அதன்படியே இன்று வரை செயல்பட்டு வருகிறேன். பயிற்சி போட்டியில் கூட நான் 27 ரன்கள் தான் அடித்தேன். ஆனால் அதில் 21 பந்துகளை நான் பேட்டின் மையப்பகுதியில் அடித்தேன். இதுவே எனக்கு தற்போது நல்ல விஷயம்.

குறிக்கோள்

குறிக்கோள்

இதே போல நான் தற்போது ஃபீல்டிங்கில் அதிக கவனம் செலுத்தப் போகிறேன். நான் இயற்கையாகவே ஃபீல்டர். கடினமான கேட்ச்-களையும் பிடித்துவிட வேண்டும் என நினைக்கிறேன். இந்த தொடரில் எப்படியாவது என் வாழ்நாளில் சிறந்த கேட்ச்-ஐ பிடித்துவிட வேண்டும் என்ற குறிக்கோளோடு உள்ளேன் என ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

Story first published: Tuesday, October 18, 2022, 20:06 [IST]
Other articles published on Oct 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+