Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 பேருக்குமே காயம்.. பும்ராவுக்கு மாற்று வீரரை அறிவிக்க இன்று கடைசி நாள்.. பிசிசிஐ அதிரடி முடிவு!!

மும்பை: ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்று வீரர் யார் என்பதை அறிவிக்கும் கடைசி நாளான இன்று பிசிசிஐ முக்கிய முடிவை எடுத்துள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக விலகினார். இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

 பும்ராவின் மாற்று

பும்ராவின் மாற்று

இதனையடுத்து ஜஸ்பிரித் பும்ராவின் இடத்தை பூர்த்தி செய்யவுள்ள வீரர் யார் என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு, வருகின்றன. முதலில் முகமது ஷமி, தீபக் சஹார், முகமது சிராஜ் ஆகிய 3 பேர் போட்டிப்போட்டு வந்த சூழலில் தென்னாப்பிரிக்க தொடரில் சொதப்பிய சிராஜ்-ன் பெயர் பரிசீலனையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ஷமி மற்றும் தீபக் சஹார் இடையே போட்டி நடந்து வருகிறது.

இருவருக்குமே காயம்

இருவருக்குமே காயம்

இதில் கொடுமை என்னவென்றால் இந்த இரண்டு வீரர்களுமே தற்போது காயம் காரணமாக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஷமி இன்னும் முழு உடற்தகுதியை நிரூபிக்கவில்லை. மற்றொரு புறம் தென்னாப்பிரிக்க தொடரில் அட்டகாசமான கம்பேக் தந்த தீபக் சஹார் முதுகு வலி பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.

இன்று கடைசி நாள்

இன்று கடைசி நாள்

இந்நிலையில் இருவரில் யார் பும்ராவுக்கு மாற்று என்பதை அறிவிக்க இன்றே கடைசி நாளாகும். அதாவது ஐசிசியிடம் இருந்து எந்தவொரு அனுமதியும் பெறாமல் சுதந்திரமாக இன்றைக்குள் எந்த மாற்றத்தை வேண்டுமானாலும் பிசிசிஐ செய்துக்கொள்ளலாம். ஒருவேளை இன்று தவறவிட்டால், ஐசிசியிடம் சரியான காரணத்தை விளக்கி அனுமதி பெற்ற பின்னரே அணியில் மாற்றம் செய்ய முடியும். அதுவும் அக்டோபர் 15ம் தேதிக்குள் இதனை செய்தாக வேண்டும்.

பிசிசிஐ முக்கிய முடிவு

பிசிசிஐ முக்கிய முடிவு

இந்த விவகாரத்தில் பிசிசிஐ அக்டோபர் 15ம் தேதியை தேர்வு செய்துள்ளது. முகமது ஷமி முழுமையாக குணமடைந்துள்ளதால் இன்னும் 2 நாட்களில் உடற்தகுதி தேர்வு உள்ளது. எனவே அதனை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மற்றொரு புறம் தீபக் சஹாருக்கு ஓய்வு தேவை எனக் கூறப்பட்டுள்ளதால் 2 - 3 நாட்களுக்கு பிறகே அவரின் உடல்நிலை குறித்து தெரியவரும். இதனால் நேரடியாக 15ம் தேதியன்று மாற்று வீரரை அறிவித்துக் கொள்ளலாம் என முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

Story first published: Sunday, October 9, 2022, 15:48 [IST]
Other articles published on Oct 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+