Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னங்க சொல்றீங்க? தினேஷ் கார்த்திக் உடல்நிலை குறித்து புது அப்டேட்..வங்கதேச போட்டியில் என்ன ஆகும்?

அடிலெய்ட்: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இனி வரும் போட்டிகளில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

லீக் சுற்றில் தனது முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளை வீழ்த்திய இந்திய அணி, 3வது போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் 134 ரன்கள் என்ற குறைந்த இலக்கை நிர்ணயித்த போதும், கடைசி ஓவர் வரை தென்னாப்பிரிக்காவிடம் போராடி தோல்வியை பெற்றது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அடுத்த ஆட்டம்

அடுத்த ஆட்டம்

குரூப் பி பிரிவில் உள்ள இந்திய அணி இனி அரையிறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், அடுத்ததாக உள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும். அந்தவகையில் முதலில் வரும் நவம்பர் 2ம் தேதியன்று வங்கதேச அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டி அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பின்னடைவு

பின்னடைவு

இந்நிலையில் இந்தியாவின் திட்டத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நட்சத்திர வீரரும், விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் காயம் காரணமாக விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்க போட்டியின் போது டைவ் அடித்த அவருக்கு முதுகில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஆட்டத்தின் பாதியிலேயே அவர் பெவிலியனுக்கு அழைத்து செல்லப்பட்டு, ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்தார்.

ஓய்வு தேவை

ஓய்வு தேவை

மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள தினேஷ் கார்த்திக்கிற்கு நல்ல ஓய்வு தேவை என தெரிகிறது. இதனால் நாளை மறுநாள் நடைபெறும் வங்கதேச அணியுடனான போட்டியில் ரிஷப் பண்ட் தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்படுவார். பண்ட் இடதுகை வீரர் என்பதால், இடது - வலது காம்பினேஷனும் பயன்படுத்தப்படலாம்.

கே.எல்.ராகுல் இடம்

கே.எல்.ராகுல் இடம்

ஒருவேளை தினேஷ் கார்த்திக் குணமடைந்து வந்தாலும், பண்ட் உள்ளே வருவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஏனென்றால் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் தொடர்ச்சியாக 3 போட்டிகளிலும் சொதப்பி இருப்பதால், அவருக்கு மாற்று வீரராக பண்ட் ஓப்பனிங் கூட களமிறங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, October 31, 2022, 16:01 [IST]
Other articles published on Oct 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+