Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ரா - ஹர்ஷல் உடற்தகுதி தேர்வு முடிவு வெளியானது.. டி20 உலகக்கோப்பை அணியில் பெரும் மாற்றம்?- விவரம்

மும்பை: ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோரின் உடற்தகுதி தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

Recommended Video

T20 WC 2022: Asia Cup-ல் களமிறங்காத Indian Players-க்கு Chance | Aanee's Appeal

துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறி அதிர்ச்சி அளித்தது.

இதனையடுத்து ரசிகர்கள் அனைவரின் பார்வையும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி எப்படி இருக்கும் என்பதன் பக்கம் திரும்பியுள்ளது.

டி20 உலகக்கோப்பை அணி

டி20 உலகக்கோப்பை அணி

அக்டோபர் மாதம் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை வரும் செப்டம்பர் 15 அல்லது 16ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும். ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு பெரும் பிரச்சினையாக இருந்தது பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் இல்லாதது தான். காயம் காரணமாக விலகி இருந்த அவர்கள், உலகக்கோப்பையிலாவது வருவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

முடிவுகள் வெளியானது

முடிவுகள் வெளியானது

இந்நிலையில் அதற்கான முடிவு தற்போது கிடைத்துள்ளது. பும்ரா, ஹர்ஷல் பட்டேல் ஆகிய இருவருக்கும் நேற்றைய தினம் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டது. அவர்களின் இருவரின் வேகம், மற்றும் பவுலிங் லைன்களை நன்கு ஆராய்ந்த பயிற்சியாளர்கள், இந்திய அணிக்கு மீண்டும் செல்லலாம் என சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

மேலும் ஒரு சிக்கல்

மேலும் ஒரு சிக்கல்

இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுடனான டி20 தொடர்களில் மோதவுள்ளது. இந்த இரண்டு தொடர்களிலும் பங்கேற்று இருவரும் ஃபார்மை நிரூபிக்கவுள்ளனர். ஒருவேளை இதில் சொதப்பினாலும் கூட அணியில் இருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

யார் நீக்கம்

யார் நீக்கம்

ஆசிய கோப்பையில் புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் என 3 பேர் மட்டுமே சென்றனர். தற்போது பும்ரா, ஹர்ஷல் வர வேண்டும் என்பதால் ஆவேஷ் கான் நீக்கப்படுவார் எனத்தெரிகிறது. தீபக் சஹாரும் அணிக்குள் வர அதிக வாய்ப்புகள் உள்ளது எனக்கூறப்படுகிறது.

Story first published: Sunday, September 11, 2022, 9:23 [IST]
Other articles published on Sep 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+