Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அவர் மேல நம்பிக்கையே இல்ல”.. அஸ்வின் குறித்து கபில் தேவ் தடாலடி பதில்.. காரணம் என்ன தெரியுமா?

மெல்பேர்ன்: இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் அஸ்வின் என்னதான் சிறப்பாக செயல்பட்டாலும் அவர் மீது கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை என கபில் தேவ் கூறியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றுகள் முடிந்து அரையிறுதி சுற்று தொடங்கவுள்ளது. இதில் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இதனையடுத்து வரும் நவம்பர் 10ம் தேதி இங்கிலாந்துடனான அரையிறுதிப்போட்டியில் இந்தியா மோதவுள்ளது. அடிலெய்டில் உள்ள மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

ப்ளேயிங் 11 குழப்பம்

ப்ளேயிங் 11 குழப்பம்

இந்த போட்டிக்கான ப்ளேயிங் 11 குறித்த விவாதம் தற்போதே தொடங்கிவிட்டது. குறிப்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் யுவேந்திர சாஹல் ஆகியோரில் யாருக்கு வாய்ப்பு என்பது தான் பெரிய விஷயமாக வெடித்துள்ளது. அஸ்வின் ரன்களை கட்டுப்படுத்துகிறாரே தவிர விக்கெட் எடுக்கவில்லை என்றும், சாஹல் ரன் கொடுத்தாலும் விக்கெட் எடுக்கிறார் என்றும் விமர்சனங்கள் இருந்தன.

அஸ்வினின் பதிலடி

அஸ்வினின் பதிலடி

ஆனால் அஸ்வின் அதற்கெல்லாம் பதிலடி கொடுத்துள்ளார். நடப்பு தொடரில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்களை கைப்பற்றியவர் அஸ்வின் தான். குறிப்பாக வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான மெல்பேர்னிலேயே ஜிம்பாப்வேவுக்கு எதிராக 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். எனவே இங்கிலாந்துடனான அரையிறுதிப்போட்டியிலும் அவர் தான் விளையாட அதிக வாய்ப்புள்ளது.

கபில் தேவ் விளக்கம்

கபில் தேவ் விளக்கம்

இந்நிலையில் அதுகுறித்து கபில் தேவ் பேசியுள்ளார். அதில், தற்போது வரை அஸ்வின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஜிம்பாப்வேவுடன் அவர் விக்கெட் எடுத்தார். ஆனால் அவர் விக்கெட் எடுத்தது போன்று தெரியவில்லை. பேட்ஸ்மேன்களே விக்கெட் ஆனது போன்று தான் இருந்தது. ஏனென்றால் பேட்ஸ்மேன்கள் அவுட்டான விதத்தை அஸ்வினாலேயே நம்ப முடியவில்லை. அவரிடம் முன்பு இருந்த ஃபார்ம் இல்லை.

சாஹல் தேவையா?

சாஹல் தேவையா?

அஸ்வின் , சாஹலில் யாரை சேர்ப்பது என்பது அணி நிர்வாகத்தின் முடிவு தான். ஒருவேளை அவர்களுக்கு நம்பிக்கை இருந்தால் அஸ்வினை சேர்க்கட்டும். அவர் தொடர் முழுவதும் விளையாடியுள்ளதால், அவர் பொருந்துவார் என நினைக்கிறேன். அணிக்கு ஃப்ரிஸ்ட் ஸ்பின்னர் தேவைப்படுகிறார். ஆனால் நிர்வாகம் யாரை தேர்ந்தெடுப்பது என்பதை முடிவு செய்யும்.

Story first published: Monday, November 7, 2022, 14:49 [IST]
Other articles published on Nov 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+