தோனி சொல்லிக்கொடுத்த வித்தை.. விராட் கோலியை மடக்க மொயீன் வகுத்த வியூகம்.. அடடே இதை யோசிக்கலையே!
அடிலெய்ட்: இங்கிலாந்து அணியுடனான போட்டியில் விராட் கோலி தனது வழக்கமான அதிரடியை காட்டுவது சந்தேகம் என்ற சூழலே உள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான 2வது அரையிறுதிப்போட்டியில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.
லீக் சுற்றில் 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்ற இந்திய அணி நல்ல ஃபார்மில் இருக்கிறது. எனவே இன்று இஅங்கிலாந்து அணியையும் வீழ்த்தும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

விராட் கோலியின் ஃபார்ம்
லீக் சுற்று முழுவதும் இந்திய அணிக்கு முதுகெலும்பாக இருந்தது விராட் கோலி தான். இக்கட்டான சூழலில் அணி இருந்த போதும் தனி ஒருவராக காப்பாற்றி வருகிறார். எனவே விராட் கோலியை இந்த போட்டியில் அடக்குவதையே முதன்மை திட்டமாக இங்கிலாந்து வகுத்து வருகிறது. அதற்கு அவர்கள் வைத்துள்ள பிரமாஸ்திரம் மொயீன் அலி தான்.

குழம்பும் பவுலர்கள்
இதுநாள் வரை விராட் கோலிக்கு பலவீனமாக இருந்ததே ஆஃப் சைட் பவுலிங் தான். அதாவது வேகப்பந்துவீச்சாளர்கள் 4வது ஸ்டம்ப் லைனில் வீசும்போது அதனை அடிக்க நினைத்து எட்ஜாகி வந்தார். ஆனால் தற்போது அதனை சாதூர்யமாக அடிக்க பழகிவிட்டதால் அவருக்கு எப்படி பந்துவீசுவது என புரியாமல் பவுலர்கள் திணறுகிறார்கள். பவுன்சர்கள் மட்டுமே உதவுகிறது. அதுவும் எப்போதாவது தான்.

தோனியின் ப்ளான்
இந்நிலையில் கோலியை வீழ்த்த மொயீன் அலி மட்டும் தனி வியூகம் வைத்துள்ளார். அது தோனி கற்றுக்கொடுத்த வித்தை தான். ஐபிஎல்-ல் யாராலும் அடக்க முடியாத கோலியை ஒரே ஒரு பந்து மூலம் ஷாக் கொடுத்தார் மொயீன். அதாவது ஃபுல்லர் லெந்த் பந்தை ஆஃப் கட்டாராக வீசினார். அதாவது சரியாக பேட்ஸ்மேனின் பாதத்திற்கு முன்னால் பிட்ச் ஆக வேண்டும்.

பின் என்ன நடந்தது?
அப்படி பிட்ச் ஆகும் பந்து பந்து சிறிதாக டேர்ன் ஆகும் என லெக் சைடில் அடிக்க விராட் கோலி முயன்றர். ஆனால் எதிர்பாராத விதமாக க்ளீன் போல்ட்டானார். எப்படி அவுட்டானோம் என அவருக்கே தெரியாமல் திகைப்பில் ஆழ்ந்தார். நடப்பு தொடரில் இன்னும் யாருமே இந்த வியூகத்தை பயன்படுத்தவில்லை. தோனி கொடுத்த டிப்ஸ் நிறைய மொயீன் அலியிடம் உள்ளதால் இன்று நிச்சயம் இதை பயன்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications