Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது லிஸ்ட்லையே இல்லையே.. முகமது ஷமியின் ஒரே ஒரு ஓவர்..ஒட்டுமொத்த ஆட்டமும் தலைகீழானது- என்ன நடந்தது?

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் முகமது ஷமி கொடுத்த ட்விஸ்ட்டால் ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டியில் இன்று இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதின.

பிரிஸ்பேனில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் அரோன் ஃபிஞ்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணி பேட்டிங்

இந்திய அணி பேட்டிங்

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் 57 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 50 ரன்கள் என சிறப்பாக விளையாட மற்ற வீரர்கள் 20 ரன்களுக்குள் அவுட்டாகி சென்றனர். இதனால் 20 ஓவர்களில் இந்தியா 186/7 ரன்களை குவித்தது. கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தி வெற்றி பாதைக்கு அருகில் சென்றது.

அச்சுறுத்திய ஆஸ்திரேலியா

அச்சுறுத்திய ஆஸ்திரேலியா

அந்த அணியில் ஓப்பனிங் வீரர்கள் மிட்செல் மார்ஷ் (35), ஆரோன் ஃபிஞ்ச் (76) என அட்டகாசமான தொடக்கத்தை கொடுத்தனர். இதன்பின்னர் வந்த ஸ்டீவ் ஸ்மித் (11), க்ளென் மேக்ஸ்வெல் (23) என அடிக்க ஆஸ்திரேலிய அணி 18 ஓவர்களில் 171 /4 ரன்களை எடுத்து வலுவாக இருந்தது. கடைசி 2 ஓவர்களில் 16 ரன்களே தேவைப்பட்டதால் இந்திய அணி தோற்றுவிடும் என அனைவரும் நினைத்தனர். ஆனால் கடைசி 2 ஓவர்கள் பெரும் ட்விஸ்ட்டை கொடுத்தது.

 ஆட்டத்தின் திருப்புமுனை

ஆட்டத்தின் திருப்புமுனை

ஹர்ஷல் பட்டேல் வீசிய அந்த ஓவரில் முதல் பந்தில் ஃபிஞ்சும், 2வது பந்தில் ஜோஸ் இங்கிலிஸும் அடுத்தடுத்து அவுட்டாகினர். அடுத்த 4 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே சென்றது. இதனால் கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை என்ற சூழல் உருவானது. பேட் கம்மின்ஸ், ஆஷ்டின் ஆகர் என களத்தில் இருந்ததால் கடைசி ஓவரில் எப்படியும் அடித்துவிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதே போல கடைசி ஓவரை யார் வீசப்போகிறார்கள் எனறும் எதிர்பார்த்தனர்.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத திருப்புமுனை யை கொடுத்தார் ரோகித் சர்மா. அதாவது ப்ளேயிங் 11-லேயே இல்லாத முகமது ஷமியை 20வது ஓவரை போட அழைத்தார். கொரோனா பாதிப்புக்கு பின்னர் முதல் முறையாக அவர் விளையாடினார். முதல் 2 பந்துகளில் 4 ரன்கள் சென்றது. அடுத்த 4 பந்துகளில் தனது முழு ஃபார்மை நிரூபித்தார் ஷமி.

 அட்டகாசமான யார்க்கர்

அட்டகாசமான யார்க்கர்

3வது பந்தை பேட் கம்மின்ஸ் தூக்கி அடிக்க, அதனை கோலி அட்டகாசமான கேட்ச்-ஆக பிடித்தார். 4வது பந்தில் ஃபீல்டர்களை உள்ளே கொண்டு வந்த ஷமி, ஆஷ்டின் ஆகரை ரன் அவுட்டாக்கினார். 5வது பந்தில் ஷமி வீசிய துல்லியமான யார்க்கரில் ஜோச் இங்கிலீஸ் போல்ட்டானார். 6வது பந்தையும் யார்க்கர் ஆக வீச, கேன் ரிச்சர்ட்சன் தப்பிக்கவில்லை. இதனால் 4 பந்துகளில் 4 விக்கெட்கள் வர 20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Story first published: Monday, October 17, 2022, 16:49 [IST]
Other articles published on Oct 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+