Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தானுக்கு அடித்த மெகா யோகம்.. அரையிறுதிக்கு முன்னேற்றம்.. வங்கதேசத்துடன் போராடி வெற்றி!

அடிலெய்ட்: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு பாகிஸ்தான் அணி அதிர்ஷ்டவசமாக முன்னேறி அசத்தியுள்ளது.

இன்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்றின் கடைசி நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டி அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

இன்று காலை இது வெறும் சாதாரண போட்டியாக பார்க்கப்பட்ட சூழலில் சிறிது நேரத்திற்கு முன்பாக மிகவும் முக்கியமான போட்டியாக மாறிவிட்டது. இதற்கு காரணம் தென்னாப்பிரிக்க அணி தான்.

வங்கதேச போட்டி

வங்கதேச போட்டி

அதாவது குரூப் பி பிரிவில் இந்திய அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென்னாப்பிரிக்கா 2வது இடத்திலும் இருந்தது. பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் தலா 4 புள்ளிகளுடன் இருந்தனர். தென்னாப்பிரிக்க அணி நெதர்லாந்துடன் தான் கடைசி ஆட்டத்தில் மோதியதால் எப்படியும் வென்றுவிடும், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் வெளியேறிவிட்டது என நினைக்கப்பட்டது. ஆனால் தென்னாப்பிரிக்கா அதிர்ச்சி தரும் வகையில் தோற்றது.

முக்கிய போட்டி

முக்கிய போட்டி

இதனால் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு அரையிறுதி வாய்ப்பு என்ற சூழல் ஏற்பட்டது. அதன்படி பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இப்போட்டியில் வங்கதேசம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. டாஸை போலவே வங்கதேச அணிக்கு முதல் 10 ஓவர்கள் சிறப்பாகவே அமைந்தது.

சொதப்பிய வங்கதேசம்

சொதப்பிய வங்கதேசம்

அந்த அணியின் ஓப்பனிங் வீரர் ஷாண்டோ 48 பந்துகளில் 54 ரன்களும், சௌம்யா சர்கார் 17 பந்துகளில் 20 ரன்களும் அடிக்க, வங்கதேச அணி 10.4 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 73 ரன்கள் குவித்திருந்தது. இதனால் 150+ ஸ்கோர் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரும் ட்விஸ்ட் ஏற்பட்டது. மிடில் ஆர்டரில் வந்த அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து அதிரடி காட்ட முயன்று விக்கெட் ஆகினர். இதனால் 10 ஓவர்களில் 70 ஆக இருந்த ஸ்கோர் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 126 தான் என மாறியது.

 பாகிஸ்தானின் வெற்றி

பாகிஸ்தானின் வெற்றி

மிகவும் குறைந்த இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு நிதானமான தொடக்கம் கிடைத்தது. ஓப்பனிங் வீரர்கள் முகமது ரிஸ்வான் 32 ரன்களும், பாபர் அசாம் 25 ரன்களும் அடிக்க அந்த அணி 11.2 ஓவர்களில் 61 /2 என வலுவாக இருந்தது. இதன்பின்னர் வந்த முகமது ஹாரிஸ் 18 பந்துகளில் 31 ரன்களும், ஷான் மசூத் 24 ரன்களும் அடிக்க 18.1 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 128 ரன்களை எடுத்து வெற்றி கண்டது. மேலும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

Story first published: Sunday, November 6, 2022, 13:18 [IST]
Other articles published on Nov 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+