For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நியூசிலாந்துக்கு எமனாக மாறிய பாகிஸ்தான்.. இந்த முறை மிஸ்ஸே ஆகாது.. கடைசி நேரத்தில் கூடிய பலம்!

சிட்னி: நியூசிலாந்து அணி இந்த முறை இறுதிப்போட்டிக்கு செல்வதில் பாகிஸ்தான் அணி எமனாக வந்து நின்றுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்து அரையிறுதி சுற்றுகள் தொடங்கியுள்ளன. முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி நவம்பர் 9ம் தேதியன்று சிட்னியில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

கோலி, ரோகித், டிராவிட்டின் நெகிழ்ச்சி செயல்.. மூன்று பேருக்குமே பெரிய மனசு.. இது அணி இல்ல குடும்பம்கோலி, ரோகித், டிராவிட்டின் நெகிழ்ச்சி செயல்.. மூன்று பேருக்குமே பெரிய மனசு.. இது அணி இல்ல குடும்பம்

அரையிறுதி சுற்று

அரையிறுதி சுற்று

இந்தியா, ஜிம்பாப்வே அணிகளிடம் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் அணி அதன்பின்னர் தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பெற்று கடைசி நேரத்தில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அதுவும் நெதர்லாந்திடம் தென்னாப்பிரிக்கா பெற்ற தோல்வி தான் அதிர்ஷ்டவசமாக வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது. மறுபுறம் நியூசிலாந்து அணி 5 போட்டிகளில் ஒரே ஒரு தோல்வியை மட்டுமே பெற்று பலமாக அரையிறுதிக்கு வந்துள்ளது.

பாகிஸ்தானின் ஃபார்ம்

பாகிஸ்தானின் ஃபார்ம்

இந்நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி தான் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இதற்கு காரணம் அந்த அணியில் அனைத்து துறைகளும் அசுர பலம் பெற்றுள்ளது தான். ஓப்பனிங்கில் பாபர் அசாமின் ஃபார்ம் கவலைக்கிடமாக இருந்தது. முதல் 4 ஆட்டங்களில் ஒற்றை இலக்க ஸ்கோரிலேயே மோசமாக அவுட்டான அவர், கடைசியாக ஆடிய வங்கதேச போட்டியில் எவ்வித பிரச்சினையும் இன்றி சரியாக பேட்டிங் செய்தார்.

பாபர் அசாம் கம்பேக்

பாபர் அசாம் கம்பேக்

வேகப்பந்துவீச்சில் திணறாமல் 33 பந்துகளில் 25 ரன்களை அடித்தார். ஃபூட் வொர்க்கும் சிறப்பாக இருந்ததால் அடுத்த போட்டியில் அவரின் கம்பேக் இருப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. பாபர் சரியானால் ரிஸ்வானையும் கட்டுப்படுத்த முடியாது. இதே போல மிடில் ஆர்டரும் சரியாகியுள்ளது. ஷான் மசூத் இஃப்திகார் ரஹ்மான் ஆகியோர் அதிரடி காட்டி வருகின்றனர்.

 நியூசி,யின் பலவீனம்

நியூசி,யின் பலவீனம்

தொடர்ச்சியாக 3 அபார வெற்றிகளை பதிவு செய்துள்ள பாகிஸ்தான் அணி நல்ல புத்துணர்ச்சியுடன் இருக்கிறது. மற்றொருறம் நியூசிலாந்து அணியில் பவுலிங் சற்று பலவீனமாக உள்ளது. எனவே உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நியூசிலாந்தின் கனவுக்கு இந்த முறையும் பாகிஸ்தான் முட்டுக்கட்டை போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, November 8, 2022, 14:53 [IST]
Other articles published on Nov 8, 2022
English summary
Pakistan Team are more dangerous against New Zealand team ahead of semi final clash of t20 world cup 2022
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X