For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“சூர்யகுமார் யாதவ் வேற்று கிரகவாசி”.. அவரை எப்படி அவுட்டாக்குவது?.. பாகிஸ்தான் ஜாம்பவான்கள் பேச்சு!

அடிலெய்ட்: இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் வேற்று கிரகவாசி என பாகிஸ்தான் முன்னாள் வீரர் வசீம் அக்ரம் கூறியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று அரையிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளது. வரும் நவம்பர் 10ம் தேதி அரையிறுதிப்போட்டியன்று அடிலெய்டில் நடைபெறவுள்ளது.

இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் அதிக கவனத்தை ஈர்த்திருப்பவர் சூர்யகுமார் யாதவ் தான். இக்கட்டான சூழல்களில் அவர் தான் காப்பாற்றி வருகிறார்.

சூர்யகுமார் யாதவ் அதிரடி

சூர்யகுமார் யாதவ் அதிரடி

லீக் சுற்று போட்டிகளின் போது, இந்திய அணியின் ஸ்கோர் குறைவாக இருந்த போதெல்லாம், மிடில் ஆர்டரில் இருந்து அதிரடியாக ஸ்கோரை உயர்த்திச் சென்றவர் சூர்யகுமார் யாதவ் தான். ஜிம்பாப்வே போட்டியில் கூட சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 61 ரன்களை விளாசினார். அவர் மட்டும் இல்லையென்றால் ஜிம்பாப்வேவுக்கு எதிராக 150 ரன்கள் கூட வந்திருக்காது.

வசீம் அக்ரம் பேச்சு

வசீம் அக்ரம் பேச்சு

இந்நிலையில் சூர்யகுமார் யாதவின் பேட்டிங்கை பார்த்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் வசீம் அக்ரம் வியந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சூர்யகுமார் யாதவ் வேற்று கிரகத்தில் இருந்து வந்திருக்கிறார் என நினைக்கிறேன். மற்ற பேட்ஸ்மேன்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்ட நபராக திகழ்கிறார். அவர் ஜிம்பாப்வே அணிக்கெதிராக மட்டுமல்ல, உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் ரன்கள் குவித்து சோதித்து வருகிறார் என வாசிக் அக்ரம் புகழ்ந்துள்ளார்.

அவுட்டாக்கவே முடியாது

அவுட்டாக்கவே முடியாது

இதே போல மற்றொரு பாகிஸ்தான் சீனியர் வக்கார் யூனிஸும் பேசியுள்ளார். அதில், டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவை அவுட்டாக்குவதற்கு செய்ய வழி என்ன?, 50 ஓவர் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அவரை நீங்கள் திட்டம் போட்டு அவுட்டாக்கலாம். ஆனால் டி20-யில் ஏற்கனவே பந்து வீச்சாளர்கள் சிரமப்படும்போது, சிறந்த ஃபார்மில் இருக்கும் பேட்ஸ்மேனை அவுட்டாக்குவது கடினம் தான் எனக் கூறியுள்ளார்.

ஸ்கோர் விவரம்

ஸ்கோர் விவரம்

இந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் தான் 3வது இடத்தில் உள்ளார். இதுவரை 5 இன்னிங்ஸ்களில் ஆடியுள்ள அவர் 225 ரன்களை அடித்துள்ளார். இதில் 3 அரைசதங்கள் அடங்கும். முதலிடத்தில் இந்திய வீரர் விராட் கோலி 246 ரன்களுடன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, November 7, 2022, 17:56 [IST]
Other articles published on Nov 7, 2022
English summary
Pakistan legend wasim akram said Suryakumar yadav comes from a different planet, gives a ultimate Praises for performance in t20 world cup 2022
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+