தலையிலேயே பட்ட பந்து.. சுருண்டு விழுந்த ஸ்டார் ப்ளேயர்.. பாக். அணியில் பெரும் சோகம்.. என்ன ஆனது?
மெல்பேர்ன்: பாகிஸ்தான் அணியின் முக்கியமான வீரர் ஒருவருக்கு தலையிலேயே பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் வரும் அக்டோபர் 23ம் தேதியன்று மெல்பேர்னில் மைதானத்தில் மோதவுள்ளன.

இந்தியா vs பாகிஸ்தான்
கடந்தாண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய அணியும், இந்த தொடரை வெற்றியுடன் தொடங்க பாகிஸ்தான் அணியும் முணைப்புடன் களமிறங்குகின்றன. இதற்காக இரு அணிகளும் மெல்பேர்ன் சென்றடைந்த சூழலில் இன்று முதல் தீவிர வலைப்பயிற்சியை தொடங்கியுள்ளன.

சோக சம்பவம்
இந்நிலையில் பயிற்சியின் முதல் நாளே பாகிஸ்தானுக்கு பெரிய அடி விழுந்துள்ளது. அந்த அணியின் முன்னணி வீரரான ஷான் மசூத் தலையில் அடிபட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மெல்பேர்னில் ஷான் மசூத் மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் அருகருகே பேட்டிங் பயிற்சி செய்து வந்தனர். அப்போது முகமது நவாஸ் ஒரு பந்தை அதிவேகமாக அடிக்க முயன்று, அது அருகில் இருந்து ஷான் மசூத் தலையிலேயே பட்டு களத்திலேயே சுருண்டு விழுந்தார்.

விலகல்?
வலியால் துடித்து வந்த அவருக்கு உடனடியாக பயிற்சியாளர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்ட்-கள் முதலுதவி செய்தனர். ஆனால் அவரிடம் முன்னேற்றம் தெரியாததால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் அனைத்து வித ஸ்கேன்களும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அவர் இந்தியாவுடனான போட்டியில் பங்கேற்க மாட்டார் எனத்தெரிகிறது.

கடும் பின்னடைவு
பாகிஸ்தான் அணியின் ப்ளேயிங் 11ல் மிக முக்கியமான பேட்ஸ்மேன் மசூத் தான் ஆகும். அந்த அணியின் பேட்டிங்கில் ஓப்பனிங்கை தவிர வேறு யாரும் சிறப்பாக இல்லை எனக்கூறிய சூழலில், மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடும் ஒரே ஒரு வீரர் அவர் தான் ஆகும். தற்போது அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications