“ஜெயிச்சா.. கல்யாணம் பண்ணிக்கிறேன்” இந்திய போட்டி குறித்து பாக். நடிகை ஓபன் சவால்.. யாரிடம் தெரியுமா
மெல்போர்ன்: இந்திய அணியின் அடுத்த போட்டி குறித்து பாகிஸ்தானை சேர்ந்த நடிகை ஒருவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு இணையத்தை கலக்கி வருகிறது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி நடைபோட்டு வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றிகளை பெற்றுள்ளது.
இதன் மூலம் குரூப் பிரிவுக்கான புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்து அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்புகளை பிரகாசப்படுத்தியுள்ளது. குறிப்பாக தென்னாப்பிரிக்காவிடம் தோற்றாலும் வங்கதேசத்துக்கு எதிராக த்ரில் வெற்றி கண்டது.

ஜிம்பாப்வே போட்டி
இந்திய அணி தனது கடைசி மற்றும் 5வது போட்டியாக ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ளவுள்ளது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டி வரும் நவம்பர் 6ம் தேதியன்று புகழ்பெற்ற மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதிலும் இந்தியா வெற்றி கண்டால் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும். ஆனால் அதுவும் அவ்வளவு எளிதல்ல. ஜிம்பாப்வே அணி அட்டகாசமான ஃபார்மில் உள்ளது.

கலக்கல் சம்பவம்
இந்நிலையில் இரு அணிகளும் மோதும் இந்த போட்டி குறித்து பாகிஸ்தானை சேர்ந்த நடிகை ஷேஹர் ஷின்வாரி போட்டுள்ள ட்வீட் இணையத்தை கலக்கி வருகிறது. அதாவது ஜிம்பாப்வே அணி ஒருவேளை அதிசயம் தரும் வகையில் இந்தியாவை வீழ்த்திவிட்டால், ஜிம்பாப்வேவை சேர்ந்த ஒருவரை நான் திருமணம் செய்துக்கொள்கிறேன் எனக்குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஷின்வாரி யார்?
இதுபோன்ற சர்ச்சையான வகையில் ட்வீட் போடுவது இந்த நடிகைக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த 2019ம் ஆண்டு நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷமிடம் தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு கேட்டிருந்தார். இதே போல சமீபத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த போது, ஹர்திக் பாண்ட்யாவை வேண்டுமென்றே சீண்டியிருந்தார்.

குவியும் விமர்சனங்கள்
எனவே அந்த நடிகையின் புதிய அறிவிப்பை பார்த்த ரசிகர்கள், மோசமாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு ஜிம்பாப்வே அணி வீரர்கள் யாரிடமாவது இருந்து பதிலடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டி தான் லீக் சுற்றின் கடைசி போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications