Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிசிசிஐ மீது டிராவிட் மறைமுக தாக்கு.. இந்திய வீரர்களுக்கு அந்த ஒரு வாய்ப்பு இல்லையாம்.. விவரம்!

அடிலெய்ட்: இங்கிலாந்துடனான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் பிசிசிஐ மீது ராகுல் டிராவிட் மறைமுக விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப்போட்டியில் இந்திய அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 168 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 16 ஓவர்களிலேயே 170 ரன்களை குவித்தது.

பத்திரிகையாளர் சந்திப்பு

பத்திரிகையாளர் சந்திப்பு

லீக் சுற்றின் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியிருந்த இந்திய அணி, அரையிறுதியில் ஒரு போராட்டம் கூட இல்லாமல் தோல்வியடைந்தது ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் தோல்விக்கு பிசிசிஐ-ஐ மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.

டிராவிட் விளக்கம்

டிராவிட் விளக்கம்

பிக் பேஷ் போன்ற உள்நாட்டு தொடர்களில் இந்திய வீரர்கள் விளையாடாதது தான் ஆஸ்திரேலிய களத்தில் திணறுவதற்கு காரணமா? என செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த டிராவிட், நிறைய வீரர்கள் இங்கு உள்நாட்டு தொடரில் விளையாடி அனுபவம் பெறுகின்றனர். இந்திய வீரர்களுக்கு அந்த சிறப்ப வாய்ப்பு கிடைப்பதில்லை. இதுகுறித்து பிசிசிஐ தான் முடிவு எடுக்க வேண்டும்.

பிசிசிஐ-க்கு ரிஸ்க்

பிசிசிஐ-க்கு ரிஸ்க்

ஆனால் இந்திய கிரிக்கெட்டிற்கு அது மிகவும் கடினமான ஒன்று. ஏனென்றால் இந்தியாவின் உள்நாட்டு தொடர்களின் போது தான் இங்கும் நடக்கின்றன. பிசிசிஐ-ன் சவால்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஒருவேளை இந்திய வீரர்களை அங்கு ஆட அனுமதித்தால், இந்தியாவின் முக்கியமான ரஞ்சிக்கோப்பையை நாம் இழக்க நேரிடும். அதாவது இந்தியாவின் டெஸ்ட் எதிர்காலத்தை அழித்துவிடுவோம்.

வெஸ்ட் இண்டீஸின் ஃபார்முலா

வெஸ்ட் இண்டீஸின் ஃபார்முலா

இதே போல வெஸ்ட் இண்டீஸை போல ஆக்ரோஷ ஆட்டத்திற்கு ஏன் மாறவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்தார். அதில், நிறைய பேர் இதனை கேட்கிறீர்கள். அணி வீரர்கள் நிறைய பேர் மிடில் ஓவர்களில் அதிரடியாக ஆட கேட்டுக்கொண்டனர். ஆனால் அது ஆபத்தானது. அதுபோன்ற ஆணுகுமுறையால் வெஸ்ட் இண்டீஸ் அணி எந்த நிலைமைக்கு சென்றுள்ளதை நாம் பார்த்தோம். அதனை இந்தியாவுக்குள் நுழையவிடமாட்டேன்.

Story first published: Thursday, November 10, 2022, 19:24 [IST]
Other articles published on Nov 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+