அஸ்வின் மீது தவறே இல்லை.. தென்னாப்பிரிக்காவுடனான தோல்விக்கு குவியும் விமர்சனம்.. ரோகித் சர்மா ஆதரவு!
தென்னாப்பிரிக்காவுடனான தோல்விக்கு அஸ்வின் தான் காரணம் என குற்றச்சாட்டுக்கள் குவிந்து வரும் சூழலில் கேப்டன் ரோகித் சர்மா ஆதரவு கொடுத்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது 3வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியை தழுவியது. கடும் போராட்டம் நடத்தியும் கடைசி ஓவரில் இந்தியாவின் கையை விட்டு வெற்றி போனது.
இந்த தோல்வியால் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கும் இந்தியா சரிந்தது. இந்தியாவின் இந்த தோல்விக்கு சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் வீசிய ஓவர் தான் காரணம் என ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அஸ்வின் ஓவர்
ஆட்டத்தின் கடைசி 3 ஓவர்களில் 25 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் தென்னாப்பிரிக்கா இருந்தது. அப்போது நன்றாக ஆடிய மர்க்ரமும் அவுட்டாகியிருந்ததால், ரன்னை கட்டுப்படுத்த வேண்டிய முக்கிய ஓவராக இருந்தது. ஆனால் அந்த ஓவரின் முதல் 2 பந்துகளில் அடுத்தடுத்து மில்லர் சிக்ஸரை பறக்கவிட்டார். அதன்பின் விக்கெட் விழுந்த போதும், அஸ்வினின் ஓவரில் 13 ரன்கள் சென்றது. இதனால் அடுத்த 2 ஓவர்களில் 12 ரன்கள் தேவை என மாறியது.

ரோகித் சர்மா விளக்கம்
இந்நிலையில் அஸ்வினுக்கு ஆதரவாக கேப்டன் ரோகித் குரல் கொடுத்துள்ளார். அதில், கடைசி ஓவரில் ஸ்பின்னர்கள் வீசினால் என்ன ஆகும் என நான் நிறைய பார்த்துள்ளேன். அதை தவிர்ப்பதற்காக தான் அஸ்வினை முன்கூட்டியே கொண்டு வந்தேன். இதே போல வேகப்பந்துவீச்சாளர்கள் சரியான ஓவர்களை வீச வேண்டும் என்பதிலும் நான் கவனத்துடன் இருந்தேன்.

திட்டம் அதுதான்
ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் போன்ற புது பேட்ஸ்மேன் களமிறங்கிய போது, அஸ்வினை கொண்டு வருவது சரியாக இருக்கும் என நினைத்தேன். அதன்படி விக்கெட்டும் விழுந்தது. ஆனால் மில்லர் 2 சிக்ஸர்களை அடித்தது மட்டும் எதிர்பார்க்காத ஒன்று. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான களத்தில் ஸ்பின்னர்களை தான் அடிக்க முடியும். நாங்கள் கேசவ் மகாராஜை டார்கெட் செய்தோம். அதே போல அவர்கள் அஸ்வினை அடித்தார்கள். எனவே ரன் போகும் என்பது எதிர்பார்த்தது தான்.

தப்பித்தார் அஸ்வின்
இந்திய அணி அடுத்ததாக வரும் அக்டோபர் 2ம் தேதியன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் அஸ்வினை நீக்கிவிட்டு யுவேந்திர சாஹலை சேர்க்க கோரிக்கை வலுக்கிறது. ஆனால் கேப்டன் ரோகித் சர்மாவே இப்படி பேசியிருப்பதால் மாற்றம் எதுவும் இருக்காது எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications