“அதைவிட்டால் வேற வழியில்ல” ஜிம்பாப்வே போட்டிக்கான ப்ளேயிங் 11ல் தேர்வில் பயந்த ரோகித்..என்ன காரணம்
மெல்பேர்ன்: ஜிம்பாப்வே அணியுடனான போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11-ஐ தேர்வு செய்வதில் ரோகித் சர்மா திடீரென அச்சம் கொண்டுள்ளதாக தெரிகிறது.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்று இறுதிகட்டத்தை எட்டி வருகிறது. ஒவ்வொரு குரூப்பிலும் இருந்து 2 அணிகள் அரையிறுதி சுற்றுக்காக தேர்வு செய்யப்படும் சூழலில் இன்னும் எந்த அணியுமே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யவே இல்லை.
இதில் இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது. ஒட்டுமொத்த புள்ளிப்பட்டியலிலும் தற்போதைக்கு இந்தியா தான் அதிகப்புள்ளிகளுடன் இருக்கிறது.

ஜிம்பாவே ஆட்டம்
ஏற்கனவே நல்ல இடத்தில் இருக்கும் இந்திய அணி அடுத்ததாக தனது 5வது லீக் போட்டியாக ஜிம்பாப்வே அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டி வரும் அக்டோபர் 6ம் தேதியன்று மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. லீக் சுற்றின் கடைசி போட்டியும் இதுதான் ஆகும்.

அணி மாற்றங்கள்
6 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருப்பதால், ஜிம்பாப்வே போன்ற சிறிய அணிக்கு எதிராக ஸ்டார் வீரர்கள் ஓய்வு எடுத்துக்கொள்வார்கள் என கருதப்பட்டது. அரையிறுதிக்கு தயாராக வேண்டும் என்பதால் கோலி, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோருக்கு ஓய்வு தந்துவிட்டு தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் ஆகியோர் விளையாடவைக்கலாம். ஆனால் இந்த முடிவில் இருந்து ரோகித் திடீரென பின்வாங்கியுள்ளார். இதற்கு காரணம் பாகிஸ்தான் தான்.

காரணம் என்ன
தென்னாப்பிரிக்க அணியை பாகிஸ்தான் வீழ்த்திவிட்டதால் புள்ளிப்பட்டியலில் தற்போது 3வது இடத்திற்கு முன்னேறிவிட்டது. ஒருவேளை ஜிம்பாப்வேவிடம் இந்தியா தோற்று, பாகிஸ்தான் அணி தனது கடைசி ஆட்டமான வங்கதேசத்துடன் வெற்றி பெற்றுவிட்டால், இரு அணிகளும் தலா 6 புள்ளிகளுடன் இருக்கும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும்.

ரன்ரேட் சிக்கல்
எனவே ரிஸ்க் எடுக்க விரும்பாத ரோகித் சர்மா, தனது முழு பலத்துடன் களமிறங்க திட்டமிட்டுள்ளார். மேலும் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் எவ்வித மாற்றமும் இன்றி களமிறங்கவுள்ளனர். இதற்கேற்றார் போலவே ஜிம்பாப்வே அணியும் பெரிய அணிகளை வீழ்த்தி அச்சுறுத்தல் கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications