Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ப்ளேயிங் 11-க்குள் நுழையும் ஸ்டார் வீரர்.. இதுவரை செய்திராத புதிய முயற்சி..ரோகித் சர்மா பலே திட்டம்

மெல்போர்ன்: ஜிம்பாப்வே அணியுடனான போட்டியில் இந்திய அணியில் ஸ்டார் வீரர் ஒருவர் மீண்டும் கம்பேக் தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடைசி கட்டத்தை எட்டி வருகிறது. இதில் தற்போது வரை இந்திய அணி தான் அதிகபட்சமாக 6 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.

ஆனால் எந்தவொரு அணியுமே தற்போது வரை அரையிறுதிக்கு செல்வதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. மழையின் காரணமாக பல அணிகளும் ஒரே புள்ளிகளுடன் இருந்து வருகின்றன.

 அடுத்தப்போட்டி

அடுத்தப்போட்டி

முதல் 2 போட்டிகளில் அட்டகாசமான வெற்றியை பதிவு செய்த இந்திய அணி, தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது. எனினும் வங்கதேசத்துடன் த்ரில் வெற்றி பெற்று மீண்டும் அரையிறுதிக்கான ரேஸில் பங்கேற்றுள்ளது. இந்திய அணி அடுத்ததாக கடைசி லீக் போட்டியில் ஜிம்பாப்வே அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் நேரடியாக அரையிறுதிக்கு செல்ல முடியும்.

 ஸ்டார் வீரர் கம்பேக்

ஸ்டார் வீரர் கம்பேக்

இப்படிப்பட்ட சூழலில் தான் இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் நட்சத்திர வீரர் ஹர்ஷல் பட்டேல் கம்பேக் தரப்படவுள்ளார். இந்த தொடரில் தற்போது வரை ஹர்ஷல் பட்டேலுக்கு வாய்ப்பு கிடைக்கவே இல்லை. டெத் ஓவர்களில் அதிக ரன் கொடுப்பதால் ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் மட்டுமே கூட்டணி அமைத்து வருகின்றனர். ஆனால் இவர்களில் யாரையும் நீக்காமல், ஹர்ஷல் பட்டேலை உள்ளே கொண்டு வரவுள்ளனர்.

என்ன காரணம்

என்ன காரணம்

ஜிம்பாப்வே போட்டி நடைபெறும் மெல்போர்ன் மைதானத்தில் வேகப்பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் தான் இருக்கும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எந்தவித உதவியுமே இருக்காது. இதே மைதானத்தில் நடந்த பாகிஸ்தானுடனான போட்டியில் நாம் அதனை பார்த்தோம். எனவே அடுத்த போட்டியில் அக்‌ஷர் பட்டேல் அல்லது ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரில் யாரோ ஒருவரை நீக்க முடிவெடுத்துள்ளனர்.

ரோகித் பலே திட்டம்

ரோகித் பலே திட்டம்

இந்த தொடரில் இந்திய அணி இதுவரை 5 வேகப்பந்துவீச்சு மற்றும் ஒரு ஸ்பின்னருடன் களமிறங்கியதே இல்லை. 2 ஸ்பின்னர்கள் கட்டாயம் இருந்தனர். ஆனால் இறுதிப்போட்டியும் இதே மெல்பேர்னில் தான் நடக்கும். அப்போது புதிதாக முயற்சி எடுக்க முடியாது என்பதால், தற்போது அந்த வியூகத்தை பயன்படுத்த ரோகித் யோசித்து வருகிறார்.

Story first published: Friday, November 4, 2022, 9:54 [IST]
Other articles published on Nov 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+