Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தினேஷ் கார்த்திக் வேண்டாமா??.. இந்திய ப்ளேயிங் 11ல் சச்சின் கோரியுள்ள மாற்றம்.. ரசிகர்கள் அதிருப்தி!

மும்பை: இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் கடைசி நேரத்தில் வந்து மாற்றம் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 16ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியாக பாகிஸ்தான் அணியை வரும் அக்டோபர் 23ம் தேதியன்று எதிர்கொள்கிறது.

ப்ளேயிங் 11 என்ன

ப்ளேயிங் 11 என்ன

இந்திய அணியின் பேட்டிங் வரிசை தற்போது தான் எந்தவித குழப்பமும் இன்றி செட்டாகியுள்ளது. இதனை ரோகித் சர்மாவும் உறுதிப்படுத்தினார். அதாவது, " பாகிஸ்தான் போட்டிக்கான ப்ளேயிங் 11-ஐ எப்போதோ உறுதி செய்து வீரர்களிடமும் தெரிவித்துவிட்டோம். கடைசி நேரத்தில் சொல்லி அவர்கள் தயாராவதற்கு, முன்கூட்டியே சொல்லிவிட்டால் அவர்கள் அதற்கேற்ப தயாராவார்கள் என்பதால் கூறிவிட்டோம் எனத் தெரிவித்திருந்தார்.

சச்சின் அட்வைஸ்

சச்சின் அட்வைஸ்

இந்நிலையில் இந்திய அணியில் ப்ளேயிங் 11ல் மாற்றம் வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்திய அணி ப்ளேயிங் 11 தற்போது நன்றாக தான் உள்ளது. ஆனால் அணியில் ஒரு இடதுகை பேட்ஸ்மேன் இருப்பது ஒரு கூடுதல் பலம் தான். இடது - வலது காம்பினேஷனால் எதிரணியானது பவுலர்கள் மற்றும் ஃபீல்டிங்கை மாற்றிக்கொண்டே இருக்கக்கூடும். அவர்கள் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தால் எதிரணிக்கு அழுத்தம் ஏற்படும்.

பலத்தை அறிய வேண்டும்

பலத்தை அறிய வேண்டும்

எப்போதுமே டாப் 3 வீரர்களை நம்பி நான் அணியை தேர்வு செய்ய மாட்டேன். ஏனென்றால் 3 வீரர்களை மட்டும் அனுப்பினால் பணி முடிந்துவிடாது. யார் யார்? எந்த இடத்தில் இறங்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது முக்கியம், அதே போல எதிரணியின் பலம் என்னவென்பதையும் புரிந்துக்கொள்ள வேண்டும். அந்தவகையில் ஒரு இடதுகை வீரர் தேவை என சச்சின் கூறியுள்ளார்.

 பண்ட்-க்கு வாய்ப்பு

பண்ட்-க்கு வாய்ப்பு

சச்சின் டெண்டுல்கர் மறைமுகமாக ரிஷப் பண்ட்-ஐ தான் கூறுகிறார். ஏனென்றால் அணியில் இருக்கும் ஒரே ஒரு இடதுகை பேட்ஸ்மேன் அவர்தான். பண்ட்-ஐ அணிக்குள் சேர்த்தால் தினேஷ் கார்த்திக்கை நீக்க வேண்டிய சூழல் வருகிறது. ஆனால் ரிஷப் பண்ட் டி20 கிரிக்கெட்டில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதால் ஒரே மனதாக தினேஷ் கார்த்திக்கை நம்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, October 18, 2022, 19:19 [IST]
Other articles published on Oct 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+