
பும்ராவின் காயம்
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா முதுகு வலி காரணமாக கடைசி நேரத்தில் வெளியேறினார். அவர் இல்லாததால் இந்திய அணியின் பவுலிங்கில் பெரும்பின்னடைவு ஏற்பட்டுள்ளது. புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் டெத் ஓவர்களில் தடுமாறி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க பும்ராவுக்கு இன்னும் மாற்று வீரர் கூட அறிவிக்கப்படவில்லை.

சஞ்சய் பங்கர் விளாசல்
இந்நிலையில் இந்த நிலைமைக்கு ரோகித் சர்மா தான் முழு காரணம் என முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கூறியுள்ளார். அதில், பும்ராவின் ஃபிட்னஸ் எவ்வளவு முக்கியம் என்பதை ரோஹித் ஷர்மா, டிராவிட் உணரவில்லை. ஆஸ்திரேலிய தொடரில் முதல் போட்டியில் ஓய்வு கொடுத்த அவர்கள், 2வது போட்டியில் வெற்றி வேண்டும் என்பதற்காக உடல்நிலையை பற்றி தெரியாமலேயே களமிறக்கிவிட்டார்கள்.

பலவீனமான அணி
3வது போட்டியில் பும்ராவே ஃபிட்டாக இல்லை எனக்கூறிய போதும், கட்டாயப்படுத்தி விளையாட வைத்தார்கள். இதனால்தான், தென்னாப்பிரிக்க தொடரின் போது பும்ராவுக்கு முதுகுவலி பிரச்சினை பெரிதாகியுள்ளது. பும்ரா இல்லாததால் எதிரணிகளுக்கு நற்செய்தியாக இருக்கிறது. பும்ரா இல்லாத பவுலிங் பலவீனமானது என எண்ணி இனி அடித்து நொறுக்க வாய்ப்புள்ளது என சஞ்சய் பங்கர் எச்சரித்துள்ளார்.

மாற்று வீரர் யார்
ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்று வீரரை வரும் அக்டோபர் 15ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும். முகமது ஷமி மற்றும் தீபக் சஹார் இருவருமே உடற்தகுதியை நிரூபிக்காமல் பெங்களூருவில் இருந்து வருகின்றனர். இதனால் இவர்கள் இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications