ஓ மை காட்.. பேட்ஸ்மேனின் காலை உடைக்கும் வேகம்..இந்தியாவுக்கு எச்சரிக்கை தந்த சாஹீன் அஃப்ரிடி-விவரம்
பிரிஸ்பேன்: ஆஃப்கானிஸ்தான் அணியுடனான போட்டியின் மூலம் இந்தியாவுக்கு சாஹீன் அஃப்ரிடி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வரும் அக்டோபர் 23ம் தேதி எதிர்கொள்கிறது.
இந்த போட்டிக்கான பயிற்சி போட்டிகளில் தான் இரு அணிகளும் தீவிரமாக விளையாடி வருகின்றன.

பயிற்சி போட்டிகள்
அந்தவகையில் இன்று பாகிஸ்தான் அணியானது ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர் சாஹீன் அஃப்ரிடி போட்ட பவுலிங், எதிரணி வீரர்களை மிரட்டியுள்ளது. காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள அவர் இன்று வீசிய பந்து ஆஃப்கான் பேட்ஸ்மேனின் காலை பதம் பார்த்தது. இதனால் ஆஃப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் போட்டியின் நடுவே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

காலில் எலும்பு முறிவு
ஆட்டத்தின் முதல் ஓவரை சாஹீன் வீச, ஆஃப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் எதிர்கொண்டார். யார்க்கர் லெந்த்தில் 145 கிமீ வேகத்தில் சென்ற அந்த பந்து நேரடியாக குர்பாஸின் காலை பதம் பார்த்தது. அம்பயர்கள் எல்பிடபள்யூ கொடுத்துக்கொண்டிருக்க, மற்றொருபுறம் குர்பாஸ் வலியினால் துடித்துக்கொண்டிருந்தார். இதனையடுத்து அவரை தோள் மீது தூக்கிக்கொண்டு சென்றனர்.

சாஹீன் வேகம்
சாஹீன் சிறப்பாக செயல்படுவாரா என்ற சந்தேகம் இருந்த சூழலில், சாஹீன் பந்துகள் அனைத்தும் அசுர வேகத்தில் பேட்ஸ்மேனை மோதியது. பெரும்பாலான பந்துகள் 140+ கிமீ வேகத்திற்கு மேல் தான் வீசப்பட்டது. அதுவும் ஸ்விங்குடன் வேகத்தில் வந்ததால் பேட்ஸ்மேன்களால் சமாளிக்கவே முடியவில்லை. மொத்தமாக 4 ஓவர்களை வீசிய சாஹீன், 29 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

இந்தியாவுக்கு கவலை
இது இந்திய அணிக்கு தான் கவலையை கொடுத்துள்ளது. இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு இந்த வேகத்தில் வீசினால் நிச்சயம் தடுமாறுவார்கள். கடந்தாண்டு டி20 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகிய இருவருமே சாஹீனிடம் இப்படி தான் அவுட்டாகியிருந்தனர். இதனால் இதற்கு ஏற்றவாறு இந்திய ஓப்பனர்கள் தயாராக வரவேண்டும்.


Click it and Unblock the Notifications