Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அரையிறுதியில் பாகிஸ்தான்?.. கடைசியில் அதிர்ச்சி தந்த தென்னாப்பிரிக்கா.. ரசிகர்களிடையே பரபரப்பு!

அடிலெய்ட்: நெதர்லாந்து அணியுடனான போட்டியில் தென்னாப்பிரிக்கா அதிர்ச்சி கொடுத்ததால் புள்ளிப்பட்டியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெறும் கடைசி நாள் இன்றாகும். முதல் போட்டியாக தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.

இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும் சூழல் இருந்தது. ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் தோல்வியை தழுவியுள்ளது.

ஸ்கோர் விவரம்

ஸ்கோர் விவரம்

முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 20 ஒவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 158 ரன்களை குவித்தது. ஈஸியான இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு ஆட்டம் காட்டியது நெதர்லாந்து அணி. மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்ததால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 8 விக்கெட்கள் இழப்புக்கு 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

திடீர் குழப்பம்

திடீர் குழப்பம்

இந்நிலையில் இந்த தோல்வியால் குரூப் பி பிரிவில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிக்கான போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது. ஏற்கனவே வெளியேறியது என நினைத்த பாகிஸ்தான் அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. அந்த அணி இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் வெற்றி கண்டால் அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.

முக்கிய போட்டி

முக்கிய போட்டி

பாகிஸ்தான் அணி தனது கடைசி போட்டியாக வங்கதேச அணியுடன் மோதுகிறது. புள்ளிப்பட்டியலில் இந்த இரு அணிகளுமே தலா 4 புள்ளிகளுடன் உள்ளன. எனவே இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணி அரையிறுதி சுற்றுக்கு செல்லும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்திய அணி நிலைமை

இந்திய அணி நிலைமை

இந்த புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 5 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்று முதலிடத்தில் இருந்து வருகிறது. இருப்பதிலேயே அதிக புள்ளிகளை இந்தியா ஏற்கனவே பெற்றிருப்பதால் அரையிறுதிக்கு செல்வது உறுதியாகியுள்ளது. எனினும் கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்றால், அரையிறுதியில் யாருடன் மோதப்போகிறது என்பது தீர்மானிக்கப்படும்.

Story first published: Sunday, November 6, 2022, 10:27 [IST]
Other articles published on Nov 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+