Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை இன்று தொடக்கம்.. முதல் ஆட்டத்தில் இலங்கைக்கு அதிர்ச்சி அளிக்குமா நமிபியா?

ஜிலாங் : 2022 டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த இலங்கை அணியுடன் நமிபியா மோதுகிறது.

45 போட்டிகள் , 16 நாடுகள் என ரசிகர்களுக்கு விருந்து அளிக்க காத்திருக்கும் தொடரில், புதிய சாதனைகளை படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த முறை டி20 உலககோப்பையில் கூட இவ்விரு அணிகளும் தங்களின் முதல் லீக் ஆட்டத்தில் மோதி கொண்டனர்.

கடந்த முறை மோதல்

கடந்த முறை மோதல்

கடந்த முறை இவ்விரு அணிகளும் டி20 உலககோப்பையில் விளையாடிய போது நமிபியா அணியை 96 ரன்களில் இலங்கை அணி சுருட்டியது.இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 6 ஓவர்களுக்கு மேல் எஞ்சிய நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. ஆனால் அதன் பிறகு சிறப்பாக விளையாடிய நமிபியா அணி, அயர்லாந்து, நெதர்லாந்து அணிகளை வீழ்த்தி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது.

பயிற்சி ஆட்டத்தில் அசத்தல்

பயிற்சி ஆட்டத்தில் அசத்தல்

சூப்பர் 12 சுற்றில் ஸ்காட்லாந்து அணியை நமிபியா வீழ்த்தியது. இதே போன்று இம்முறையும் சாதிக்க வேண்டிய உத்வேகத்துடன் அந்த அணி களமிறங்கியுள்ளது. நமிபியா அணி, பயிற்சி ஆட்டத்தில் கூட அயர்லாந்தை வீழ்த்திய உற்சாகத்துடன் தற்போது களமிறங்கியுள்ளது. இலங்கை அணியை பொறுத்தவரை ஆசிய கோப்பையை வென்ற உற்சாகத்துடன் உள்ளது.

இலங்கை அபாரம்

இலங்கை அபாரம்

கடந்த டி20 உலகக் கோப்பைக்கு பிறகு நடைபெற்ற 10 டி20 போட்டியில், 9 ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. அதன் பிறகு நடைபெற்ற ஆசிய கோப்பையில் வென்று சாதனை படைத்தது. பயிற்சி ஆட்டத்தில் கூட ஜிம்பாப்வே அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியது. இருப்பினும் நமிபியாவை இலங்கை எளிதாக எண்ணிவிடக்கூடாது.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

இலங்கை அணி 1, நிசாங்கா, 2, குசேல் மெண்டிஸ், 3,தனஞ்செய்யா டி சில்வா, 4,குணதிலகா, 5, ராஜபக்சே, 6, சனாகா,7,ஹசரங்கா, 8, கருணரத்னே, 9,சமீரா, 10, மகீஷ் தீக்சனா, 11, மதுசங்கா

நமிபியா 1, திவன் லா காக், 2, மைக்கேல் லான், 3,ஜான் நிக்கோல், 4,எராஸ்மஸ், 5,ஜென் பிராலிங், 6, ஸ்மிட், 7, டேவிட் வீய்ஸி, 8,ரூபன் டிரம்பிள்மான், 9,சான் கிரீன், 10, பிர்ணாண்ட், 11டாங்கிணி

Story first published: Sunday, October 16, 2022, 8:16 [IST]
Other articles published on Oct 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+