Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்று முதல் டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 போட்டிகள்.. முதல் நாளிலேயே 4 பெரும் தலைகள் மோதல் - விவரம்

சிட்னி: டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுப்போட்டிகள் இன்று முதல் தொடங்கவுள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 16ம் தேதி தொடங்கி முதல் சுற்றுப்போட்டிகள் நடைபெற்று வந்தன.

T20 world cup 2022 Super 12 Round matches Starts Today, here is the Clash details

நேற்றுடன் முதல் சுற்றுப்போட்டிகள் முடிவுக்கு வந்த நிலையில் இன்று முதல் பெரிய அணிகள் பங்கேற்கும் சூப்பர் 12 போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன.

இன்றைய முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் மோதும் இந்த போட்டி சிட்னியில் உள்ள மைதானத்தில் இன்று மதியம் 12.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் தான் கடந்தாண்டு டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மோதினர் என்பதால் இவர்களே முதல் ஆட்டத்தில் மோதுகின்றனர்.

இந்த போட்டி முடிந்தவுடன் இன்று மாலை 2வது போட்டியும் உள்ளது. இதில் முன்னணி அணிகளான இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சமீப காலமாக ஆஃப்கானிஸ்தான் அணியும் கடும் சவால் கொடுத்து வருவதால் இவர்கள் மோதும் ஆட்டம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இன்றி நடைபெறும் என்பதில் சந்தேகமே இல்லை. இப்போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த இரண்டு போட்டிகளையும் ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் மூலம் நேரலையாக பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் பார்க்க விரும்புவர்கள் டிஸ்னி ஹாட்ஸ்டார் செயலியில் பார்க்கலாம்.

Story first published: Saturday, October 22, 2022, 9:53 [IST]
Other articles published on Oct 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+