Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புதிய களத்திலும் இப்படியா??.. அச்சமின்றி கெத்து காட்டிய சூர்யகுமார் யாதவ்.. ஆடிப்போன ஆஸ்திரேலியா!

பெர்த்: இந்தியாவில் அடுத்தடுத்து அதிரடிகளை காட்டி அசத்திய சூர்யகுமார் யாதவ் ஆஸ்திரேலியாவிலும் கெத்து காட்டியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது.

இந்த தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடந்த 6ம் தேதியன்றே ஆஸ்திரேலியா சென்றடைந்தது.

ஆஸ்திரேலிய தொடர்

ஆஸ்திரேலிய தொடர்

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்திற்கு சென்றடைந்த இந்திய வீரர்கள் முதற்கட்ட பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்தனர். டி20 உலகக்கோப்பைக்கு தயாராக இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் பயிற்சி போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் ஆஸ்திரேலிய களம் புதிது என்பதால் முன்கூட்டியே ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு அணிகளுடனும் பயிற்சி போட்டிக்கு ஏற்பாடு செய்தனர்.

பயிற்சி போட்டிகள்

பயிற்சி போட்டிகள்

அதன்படி இன்று இந்திய அணியும், வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணிகளும் பயிற்சி போட்டியில் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் விராட் கோலி, அஸ்வின் உள்ளிட்டோருக்கு ஓய்வு கொடுக்க மற்ற வீரர்கள் களமிறங்கினர்.

நீடித்த குழப்பம்

நீடித்த குழப்பம்

இந்திய அணியில் பெரும்பாலான வீரர்களுக்கு ஆஸ்திரேலிய களத்தில் விளையாடிய அனுபவம் இல்லை. குறிப்பாக சூர்யகுமார் யாதவ் எப்படி ஆடுவார் என்ற கேள்வி இருந்தது. ஆனால் அதற்கெல்லாம் இந்த பயிற்சி போட்டியில் தரமான பதிலடி கொடுத்துள்ளார். புதிய களத்திலும் முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டினார்.

ரசிகர்கள் நம்பிக்கை

ரசிகர்கள் நம்பிக்கை

சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 52 ரன்களை விளாசினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய களத்திலும் சூர்யகுமார் சிறப்பானவர் என்பது உறுதியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்திய அணி அடுத்ததாக அக்டோபர் 12ம் தேதி மற்றொரு உள்நாட்டு அணியுடன் மோதுகிறது. இதன்பின்னர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடனும் பயிற்சி போட்டிகளில் மோதுவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, October 10, 2022, 13:39 [IST]
Other articles published on Oct 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+