Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நம்பமுடியாத இலக்கு.. சூர்யகுமார் யாதவ் காட்டிய வாணவேடிக்கை.. பந்துவீச பயந்து திகைத்துப்போன பவுலர்கள்

மெல்பேர்ன்: ஜிம்பாப்வே அணியுடனான போட்டியில் இந்திய அணி கடைசி நேரத்தில் காட்டிய அதிரடியால் கடின இலக்கை நிர்ணயித்துள்ளது,.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் இன்று இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதின. இந்த போட்டி மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் டாஸில் இருந்தது போன்று இந்திய அணிக்கு தொடக்கம் கிடைக்கவில்லை.

கே.எல்.ராகுல் அரைசதம்

கே.எல்.ராகுல் அரைசதம்

தொடக்க வீரர் ரோகித் சர்மா அதிரடியாக 2 பவுண்டரிகளை விளாசிய போதும், அவரின் ஆட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. முசர்பாணி வீசிய பவுன்சர் பந்தை புல் ஷாட் ஆட முயன்ற ரோகித் கேட்ச் கொடுத்து 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எனினும் மறுமுனையில் கே.எல்.ராகுல் தொடர்ந்து அதிரடியை காட்டினார். 35 பந்துகளை சந்தித்த அவர் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 51 ரன்களை குவித்தார்.

கோலி சொதப்பல்

கோலி சொதப்பல்

மிடில் ஆர்டரில் மிகவும் பலமாக பார்க்கப்பட்ட விராட் கோலி நிதானமாக விளையாடினார். எனினும் அவரின் ரசிகர்களுக்கு இன்று ஏமாற்றமே 25 பந்துகளில் 26 ரன்களை அடித்து துரதிஷ்டவமாக விக்கெட்டை பறிகொடுத்தார். தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக வாய்ப்பு பெற்ற ரிஷப் பண்ட் வெறும் 3 ரன்களுக்கு வெளியேறி மீண்டும் ஏமாற்றினார்.

சூர்யகுமாரின் ஆட்டம்

சூர்யகுமாரின் ஆட்டம்

இதனால் 13.3 ஓவர்களில் இந்திய அணி 101/4 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வந்தது. ஆனால் அப்போது ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்ட்யா - சூர்யகுமார் யாதவ் ஜோடி வாணவேடிக்கை காட்டினர். கடைசி வரை நின்று ரசிகர்களுக்கு விருந்து கொடுத்த சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 61 ரன்களை விளாசினார்.

கடினமான இலக்கு

கடினமான இலக்கு

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் அடிக்கும் 3வது அரைசதம் இதுவாகும். அவருக்கு நிதானமாக நின்று பார்ட்னர்ஷிப் கொடுத்த ஹர்திக் பாண்ட்யா 18 ரன்களை குவித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 186 ரன்களை குவித்தது. இந்த மைதானத்தில் 187 ரன்கள் என்ற இலக்கை விரட்டுவது மிகவும் கடினமாகும்.

Story first published: Sunday, November 6, 2022, 15:30 [IST]
Other articles published on Nov 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+