Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இத நானா செஞ்சேன்.. நம்பவே நம்பாத கோலி”.. ஃப்ளாட் சிக்ஸரால் இந்தியா கண்ட எழுச்சி..ரசிகர்கள் வியப்பு

சிட்னி: நெதர்லாந்து அணியுடனான போட்டியில் விராட் கோலி அடித்த ஒரு சிக்ஸர் அவராலேயே நம்ப முடியாத அளவிற்கு இருந்தது.

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 179/2 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 123/9 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

கோலியின் இன்னிங்ஸ்

கோலியின் இன்னிங்ஸ்

பாகிஸ்தான் போட்டியில் ஒற்றை ஆளாக போராடி இந்தியாவுக்கு வெற்றி பெற்று தந்த விராட் கோலி, இந்த போட்டியிலும் பெரும் உதவியை செய்தார். வழக்கம் போல முதல் சில பந்துகளில் நிதானமாக விளையாடிவிட்டு, பின்னர் அதிரடியை காட்டினார். 44 பந்துகளை சந்தித்த விராட் கோலி 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 62 ரன்களை விளாசினார்.

அட்டகாசமான சிக்ஸர்

அட்டகாசமான சிக்ஸர்

இந்நிலையில் இந்த போட்டியில் அவர் அடித்த சிக்ஸர் ஒன்று ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் போட்டியில் ஹாரிஸ் ராஃப் வீசிய குட் லெந்த் பந்தை யாரும் எதிர்பாராத விதமாக ஸ்ட்ரெயிட்டாக சிக்ஸருக்கு விளாசி அசத்தினார். ஆனால் இன்றைய தினம் ஃப்ளாட்டாக சிக்ஸருக்கு விரட்டி ரசிகர்களை வியக்கவைத்துள்ளார்.

என்ன ஆனது?

என்ன ஆனது?

ஆட்டத்தின் 17வது ஓவரை நெதர்லாந்தின் பிரைம் பவுலர் க்ளாசன் வீச, விராட் கோலி சிக்ஸர் அடிப்பதற்கு பெரிதும் முயன்றார். ஆனால் லெக் சைட் முழுவதும் ஃபீல்டர்கள் இருந்தார்கள். மிட் ஆன் மற்றும் ஆஃப் பகுதிகளில் பந்தை தூக்க முடியவில்லை. இதனால் திட்டத்தை மாற்றிய கோலி, ஸ்டம்பில் இருந்து நன்கு நகர்ந்து வந்து, லெக் சைட் அடிக்க வேண்டிய பந்தை டீப் எக்ஸ்ட்ரா கவர் மீது திருப்பிவிட்டார்.

நம்பாத விராட் கோலி

நம்பாத விராட் கோலி

மிகவும் கஷ்டமான இந்த ஷாட்டால், பந்து மிகவும் கீழாக சென்று பவுண்டரி எல்லையை தொட்டது. இப்படி ஒரு ஷாட்டையா நாம் அடித்தோம் என கோலியாலேயே நம்ப முடியவில்லை. ஆச்சரியப்பட்டுக்கொண்டே சூர்யகுமாரை பார்த்து ஓடிச்சென்றார். இதுகுறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Story first published: Thursday, October 27, 2022, 17:47 [IST]
Other articles published on Oct 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+