Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிசயமா இருக்கே.. விராட் கோலி - பாபர் அசாம் ஒன்றாக வலைப்பயிற்சி..தீராத வெறி..என்ன நடந்தது தெரியுமா?

பிரிஸ்பேன்: பயிற்சி போட்டி முடிந்தவுடனே விராட் கோலி மற்றும் பாபர் அசாம் ஆகியோர் செய்த விஷயம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதல் சுற்றுப்போட்டிகள் இறுதிகட்டத்தை நெருங்கி வரும் வேளையில், சூப்பர் 12 சுற்று போட்டிகள் வரும் அக்டோபர் 22ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

பயிற்சி போட்டி

பயிற்சி போட்டி

இதற்கான பயிற்சி போட்டிகள் நேற்று ஐசிசி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரிஸ்பேனின் காப்பா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்திய போட்டி முடிந்த உடனேயே அதே மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து வெற்றி கண்டது.

சுவாரஸ்ய நிகழ்வு

சுவாரஸ்ய நிகழ்வு

இந்திய அணி விளையாடுவதை பாகிஸ்தான் வீரர்களும், பாகிஸ்தான் அணி வீரர்கள் விளையாடுவதை இந்திய அணி வீரர்கள் அமர்ந்து பார்த்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. இந்நிலையில் போட்டி முடிந்தவுடன் விராட் கோலி, பாபர் அசாம் இருவரும் சேர்ந்து ஒன்றாக வலைப்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவும் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

என்னவெல்லாம் நடந்தது

என்னவெல்லாம் நடந்தது

நேற்று போட்டி முடிந்ததும் திருப்தியடையாத விராட் கோலி, தவறுகளை சரிசெய்துக்கொள்வதற்காக வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவருக்கு மிக அருகிலேயே பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். ஒருவருக்கொருவர் கலந்தாலோசித்துக்கொண்டு, அறிவுரைகளை பகிர்ந்துக்கொண்டும் பயிற்சி மேற்கொண்ட வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

இந்தியாவின் முதல் போட்டி

சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை தான் எதிர்கொள்கிறது. இந்த போட்டி மெல்பேர்ன் மைதானத்தில் வரும் அக்டோபர் 23ம் தேதியன்று நடைபெறவுள்ளது. இந்திய அணியில் பேட்டிங் வரிசை நல்ல ஃபார்மில் இருக்கும் சூழலில் பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் மட்டுமே நம்பிக்கையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, October 18, 2022, 12:08 [IST]
Other articles published on Oct 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+