
டி20 உலகக்கோப்பை
நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதே மைதானத்தில் நடந்த மற்றொரு போட்டியில் இங்கிலாந்திடம் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்தியா விளையாடுவதை பாகிஸ்தானும், பாகிஸ்தான் விளையாடியதை இந்திய வீரர்களும் அருகில் இருந்து பார்த்தனர்.

வலைப்பயிற்சி
இந்நிலையில் அதனை விட பெரிய சுவாரஸ்யமும் அரங்கேறியுள்ளது. அதாவது ஆட்டம் முடிந்த பிறகு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோருடன் விராட் கோலி இணைந்து வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர்களுடன் பேசிக்கொண்டும், அறிவுரை வழங்கிக்கொண்டும் அருகிலேயே வலைபயிற்சியில் கோலி ஈடுபட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல் சாஹீன் அஃப்ரிடியின் பந்துவீச்சையும் எதிர்கொண்டுள்ளாராம்.

அஃப்ரிடி பவுலிங்
வலைப்பயிற்சியில் தனக்கு எதிராக பந்துவீசும்படி விராட் கோலி அழைக்க, பாகிஸ்தானின் ஸ்டார் பவுலர் சாஹீன் அஃப்ரிடி 2 ஓவர்களை வீசியுள்ளார். மொத்தம் போட்டப்பட்ட 12 பந்துகளில் 10 பந்துகள் வெறும் பவுன்சர்கள் மட்டுமே தானாம். ஒருபுறம் சாஹீன் தனது திறமையை காட்ட, மற்றொருபுறம் விராட் கோலி அதனை எதிர்த்து நிற்க பயிற்சி முகாமில் சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோலி தடுமாற்றம்
ஆனால் படு வேகமாக வந்த 10 பவுன்சர்களையுமே விராட் கோலி எதிர்கொள்ள தடுமாறியதாக தான் தகவல் வெளியாகியுள்ளது. பந்துகளை மீட் செய்வதில் கோலி சிரமம் அடைந்ததாக தெரிகிறது. எனினும் வலைப்பயிற்சியில் அதனை சரியாக எதிர்கொண்டுவிட்டால், போட்டியில் சாஹின் அப்படி போடமாட்டார் என்பதால், தான் பலவீனமாக இருப்பதாகவே காட்டிக்கொண்டதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











