Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி ஏமாற்றினாரா.??. கண்டுகொள்ளாமல் சென்ற அம்பயர்கள்.. வங்கதேசம் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடிலெய்ட்: வங்கதேச அணியுடனான போட்டியில் விராட் கோலி ஐசிசி விதிமுறையை மீறி ஏமாற்று சம்பவத்தில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று வங்கதேச அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. கடைசி பந்து வரை சென்ற இப்போட்டியில் மீண்டும் ஒரு த்ரில் வெற்றி கிடைத்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 184/6 ரன்களை குவித்தது. இதன்பின் ஆடிய வங்கதேசத்திற்கு மழையின் காரணமாக 16 ஓவர்களில் 151 ரன்கள் அடித்தால் போதும் என அறிவித்தனர். ஆனால் 145 ரன்களை மட்டுமே எடுத்து வங்கதேசம் தோற்றது.

 கோலியின் வாக்குவாதம்

கோலியின் வாக்குவாதம்

இந்த போட்டியில் கடைசி ஓவர் த்ரில், மழை குறுக்கீடு, ஓவர்கள் குறைப்பு என பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறிய போதிலும், விராட் கோலி செய்த சம்பவங்கள் தான் பேசுப்பொருளாகியுள்ளது. அதாவது கோலி பேட்டிங் செய்த போது ஒரே ஓவரில் 2 பவுன்சர்கள் போடப்பட்டது. இதற்கு கோலி நோ பால் கேட்டவுடன் அம்பயர்களும் கொடுத்தனர். அப்போது வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசனுக்கும் கோலிக்கும் சிறிய பிரச்சினை ஏற்பட்டது.

சர்ச்சை

சர்ச்சை

இந்நிலையில் கோலி செய்த மற்றொரு விஷயமும் பரபரப்பாகியுள்ளது. அதாவது வங்கதேச அணி பேட்டிங் செய்துக்கொண்டிருந்த போது, விராட் கோலி தனது கைகளில் பந்து ஏதும் இல்லாமலேயே ரன் அவுட் செய்வது போல போலியாக த்ரோ செய்து ஏமாற்றினார். இதனால் ரன் ஓடும் போது தடுமாறினோம் என வங்கதேச அணி சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

என்னதான் நடந்தது?

என்னதான் நடந்தது?

ஆட்டத்தின் 7வது ஓவரின் போது அக்‌ஷர் பட்டேல் வீசிய பந்தை லிண்டன் தாஸ் ஆஃப் சைடில் அடித்துவிட்டு ரன் ஓடினார். பந்து நேராக பவுண்டரி எல்லையில் இருந்த அர்ஷ்தீப் சிங்கிடம் சென்றது. அதனை அவர் தினேஷ் கார்த்திக்கிடம் வீசினார். ஆனால் நடுவே இருந்த விராட் கோலி, பந்து தன் கையில் இல்லை என்ற போதும், நான் ஸ்ட்ரைக்கர் எண்டிற்கு த்ரோ செய்வது போன்று ஏமாற்றினார். இதனால் பேட்ஸ்மேன்கள் குழம்பினர்.

நடவடிக்கை?

நடவடிக்கை?

விராட் கோலியின் இந்த செயலுக்கு அம்பயர்கள் களத்திலேயே கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும் என்றும் நோ பால் கொடுத்து மொத்தம் 5 ரன்களை பெனால்டியாக கொடுத்திருக்க வேண்டும் என வங்கதேச அணி அதிருப்தி தெரிவித்துள்ளது. இதனால் கோலி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

Story first published: Thursday, November 3, 2022, 11:33 [IST]
Other articles published on Nov 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+