Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூப்பர்மேனாக மாறிய விராட் கோலி.. 2 தரமான செய்கை.. ஆட்டம் கண்டுபோன ஆஸ்திரேலிய வீரர்கள் - வீடியோ!

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விராட் கோலி செய்த சூப்பர் மேன் சம்பவங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

டி20 உலகக்கோப்பைக்கான பயிற்சி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் இந்திய அணி கடைசி நேரத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

பயிற்சி போட்டி

பயிற்சி போட்டி

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 186 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 57 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 50 ரன்களும் விளாசினர். இதன்பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 180 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

 2 தரமான சம்பவங்கள்

2 தரமான சம்பவங்கள்

இந்நிலையில் இந்த போட்டியில் விராட் கோலி செய்த இரண்டு தரமான சம்பவங்கள் தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு கடைசி 11 பந்துகளில் 16 ரன்கள் தான் தேவைப்பட்டது. அப்போது அதிரடி வீரர் டிம் டேவிட் களத்தில் இருந்தார். ஹர்ஷல் பட்டேல் வீசிய பந்தை சிங்கிளுக்கு அடித்துவிட்டு, டேவிட் ரன் ஓட முயன்றார். அப்போது அபாரமாக செயல்பட்ட விராட் கோலி டைவிங்கிலேயே துல்லியமாக பந்துவீசி ரன் அவுட்டாக்கினார்.

சூப்பர் மேன் கேட்ச்கள்

சூப்பர் மேன் கேட்ச்கள்

இதே போல ஆட்டத்தின் கடைசி ஓவரில் முகமது ஷமி வீசிய பந்தை பேட் கம்மின்ஸ் சிக்ஸருக்கு தூக்கி விளாசினார். அனைவரும் அது சிக்ஸருக்கு சென்றது என நினைத்த போது, விராட் கோலி சூப்பர் மேனாக மாறி ஒற்றை கையில் அட்டகாசமான கேட்ச்-ஐ பிடித்தார். இந்த ஒரு சிக்ஸர் மட்டும் தடுக்காமல் போயிருந்தால் இந்திய அணி தோல்வியை சந்தித்திருக்கும்.

கோலியின் ஃபார்ம்

கோலியின் ஃபார்ம்

விராட் கோலி மீண்டும் தனது பேட்டிங் ஃபார்முக்கு திரும்பிவிட்டதாக ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் தற்போது அவரின் ஃபில்டிங்கும் அட்டகாசமாக இருப்பதால் இந்தியாவுக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. இவர் இந்த போட்டியில் 13 பந்துகளை சந்தித்து 1 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 19 ரன்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, October 17, 2022, 17:11 [IST]
Other articles published on Oct 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+