Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சர்வதேச அளவில் மீண்டும் ரெக்கார்ட்.. சச்சின் சாதனையை தவிடுபொடியாக்கும் விராட் கோலி.. ரசிகர்கள் குஷி

மெல்பேர்ன்: ஜிம்பாப்வே அணியுடனான போட்டியின் மூலம் விராட் கோலி சர்வதேச அளவில் பிரமாண்ட சாதனையை தகர்க்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வீர நடை போட்டு வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 4 லீக் போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்து வருபவர் விராட் கோலி என்று கூறலாம். ஆசிய கோப்பையில் தொடங்கிய அவரின் அதிரடி இன்று வரை தொடர்ந்து நீடித்து வருகிறது.

டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை

நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி தான் முதலிடத்தில் இருக்கிறார். 4 போட்டிகளில் மட்டுமே விளையாடி 220 ரன்களை குவித்துள்ளார். இதில் 3 அரைசதங்களும் அடங்கும். அந்த மூன்றுமே நாட் அவுட்டாக கடைசி வரை களத்தில் இருந்து வென்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகபட்ச ரன்கள்

அதிகபட்ச ரன்கள்

இந்த அட்டகாச ஃபார்மின் காரணமாக சமீபத்தில் சாதனை ஒன்றை படைத்திருந்தார். அதாவது டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் மஹீலா ஜெயவர்தனேவை முந்தி முதலிடத்தை பிடித்தார். ஜெயவர்தனே 1016 ரன்களை அடித்திருந்த சூழலில் அதனை கோலி முந்தி சாதனை படைத்தார்.

பிரமாண்ட சாதனை

பிரமாண்ட சாதனை

இந்நிலையில் மீண்டும் ஒரு பிரமாண்ட சாதனைக்கு காத்துள்ளார். அதாவது ஐசிசி தொடர்களில் அதிக ரன்களை அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை முந்தி முதலிடத்தை பிடிக்கவுள்ளார். சச்சின் டெண்டுல்கர் மொத்தமாக 2,719 ரன்களை அடித்துள்ளார். விராட் கோலி தற்போது 2624 ரன்களுடன் இருக்கிறார். இன்னும் 95 ரன்கள் அடித்தால் சாதனையை தகர்ப்பார்.

கிறிஸ் கெயில்

கிறிஸ் கெயில்

சர்வதேச அளவில் பார்த்தால் கிறிஸ் கெயில் 2942 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். இவரை தொடர்ந்து 2876 ரன்களுடன் 2வது இடத்தில் குமார் சங்ககாராவும், ஜெயவர்தனே 2858 ரன்களுடன் ஜெயவர்தனேவும் உள்ளனர். சச்சின் 4வது இடத்திலும் விராட் கோலி 5வது இடத்திலும் தற்போது நீடித்து வருகின்றனர்.

Story first published: Friday, November 4, 2022, 18:59 [IST]
Other articles published on Nov 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+