Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவின் கடைசி நம்பிக்கை.. இன்று நியூசி,யுடன் கடைசி பயிற்சி ஆட்டம்.. எங்கு? எப்படி? பார்ப்பது

பிரிஸ்பேன்: டி20 உலகக்கோப்பை தொடருக்கான 2வது பயிற்சி போட்டியில் இன்று இந்திய அணி பங்கேற்கவுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் வரும் அக்டோபர் 22ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இதற்காக அனைத்து அணிகளும் தங்களது கடைசி கட்ட பயிற்சிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

2வது பயிற்சி ஆட்டம்

2வது பயிற்சி ஆட்டம்

இந்திய அணி சமீபத்தில் விளையாடிய முதல் பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலியாவை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. கடைசி வரை பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் முகமது ஷமி கடைசி ஓவரில் எண்டரி தந்து 4 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். இந்நிலையில் இன்று இந்தியா தனது 2வது மற்றும் கடைசி பயிற்சி போட்டியில் விளையாடவுள்ளது.

எங்கு நடைபெறுகிறது?

எங்கு நடைபெறுகிறது?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடந்தும் இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் காப்பா மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல் போட்டி காலை 9.30 மணிக்கே தொடங்கிய சூழலில் இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி பார்க்கலாம்?

எப்படி பார்க்கலாம்?

இந்த போட்டியை ரசிகர்கள் நேரலையாக பார்ப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலின் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா என 4 மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. ஆன்லைனில் பார்க்க விரும்புவோர் வழக்கம் போல டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் கண்டுகளிக்கலாம்.

பாகிஸ்தான் மோதல்

பாகிஸ்தான் மோதல்

இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியாக பாகிஸ்தான் அணியை வரும் அக்டோபர் 23ம் தேதி எதிர்கொள்கிறது. கடந்தாண்டு சொதப்பிய இந்திய அணி இந்தாண்டு பல்வேறு மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. எனவே இந்த கடைசி பயிற்சி போட்டியில் வெற்றி பெற்றால் தான் நம்பிக்கையுடன் லீக் போட்டிகளை எதிர்கொள்ள முடியும் என்பதால் இந்த போட்டியிலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது எனத்தெரிகிறது.

Story first published: Wednesday, October 19, 2022, 10:57 [IST]
Other articles published on Oct 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+