நல்லா ஆடிய அக்ஷர் ஏன் இல்லை?.. தென்னாப்பிரிக்காவை மிரட்ட ஹூடா தான் ஆயுதம்.. டிராவிட் மெகா ஸ்கெட்ச்!
பெர்த்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நன்றாக விளையாடிய அக்ஷர் பட்டேலை நீக்கிய போதும், அதில் மெகா திட்டத்தை வைத்துள்ளார் ராகுல் டிராவிட்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இரு அணிகளும் மோதும் இந்த போட்டி பெர்த் மைதானத்தில் தொடங்கியுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அரையிறுதிக்கு செல்வதற்கான முக்கியமான போட்டி என்பதால் ப்ளேயிங் 11ல் பெரிய திட்டங்களுடன் களமிறங்கியுள்ளனர்.

அக்ஷர் பட்டேல் நீக்கம்
அதாவது இந்தியாவின் நட்சத்திர ஆல்ரவுண்டரான அக்ஷர் பட்டேல் ப்ளேயிங் 11ல் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் போட்டியில் ஏமாற்றிய போதும், நெதர்லாந்து போட்டியில் அக்ஷர் பட்டேல் அட்டகாசமாக பந்துவீசியிருந்தார். 4 ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து டாப் ஆர்டரில் 2 முக்கிய விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். பேட்டிங்கிலும் நல்ல ஃபார்மில் இருந்தார்.

குழப்பத்தில் ரசிகர்கள்
நன்றாக செட்டான அணியில் இருந்து ஏன் இப்படி நல்ல வீரரை நீக்கினார்கள், எதற்காக அவருக்கு மாற்றாக தீபக் ஹூடா சேர்க்கப்பட்டுள்ளார் என ரசிகர்கள் குழம்பியுள்ளனர். ஆனால் இந்த ரிஸ்க்கான முடிவில் தான் ராகுல் டிராவிட்டின் திட்டம் உள்ளது. இந்த போட்டியில் அக்ஷர் பட்டேலை சேர்த்திருந்தால், அதனை விட பெரிய ரிஸ்க் இருக்கவே இருக்காது.

என்ன காரணம்
தென்னாப்பிரிக்க அணியின் டாப் ஆர்டரில் 4 இடதுகை பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். எனவே அஸ்வின் கண்டிப்பாக தேவை. அதே சமயம். தென்னாப்பிரிக்காவின் இடதுகை வீரர்களிடம் அக்ஷர் பட்டேல் நல்ல அடி வாங்கியுள்ளார். ஓவருக்கு 9 ரன்கள் வரை கொடுத்து வருகிறார். பிட்ச்-ம் பெரியளவில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றது இல்லை என்பதால் அக்ஷரை கொண்டு வருவது மிகப்பெரிய ரிஸ்க்காகும்.

சாஹல் ஏன் இல்லை
இதே போல பெர்த் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றது என்பதால் ஹர்திக் பாண்ட்யா முழுமையாக பந்துவீச வேண்டிய தேவை இருக்கலாம். ஒருவேளை அக்ஷரை சேர்த்திருந்தாலும் 1 - 2 ஓவர்கள் தான் அதிகபட்சம் வீசியிருப்பார். அந்த பணியை தீபக் ஹூடாவே செய்துவிடுவார் என்பதால் அவரை சேர்த்துள்ளனர். இதே போல பேட்டிங்கிலும் ஹூடா லோயர் ஆர்டரில் உதவுவார்.


Click it and Unblock the Notifications