Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

AFG vs BAN: நம்பி ஏமாந்த வங்கதேசம்.. பவுலிங்கில் சாதித்த ஆப்கானிஸ்தான்.. மேட்ச்சில் நடந்த ட்விஸ்ட்

கிங்ஸ்டவுன்: 2021 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

இதற்கு முன் வலுவான நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் வீழ்த்தி இருந்தது. அதேபோல வங்கதேச அணியையும் ஆப்கானிஸ்தான் வீழ்த்தும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி திணறல் ஆட்டம் ஆடியது. 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால், ஆப்கானிஸ்தான் அணி சரியாக பேட்டிங் ஆடவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. வங்கதேசம் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

T20 World Cup AFG vs BAN 20 2024

ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கில் 120 பந்துகளில் 66 டாட் பால்கள் ஆடி இருந்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 55 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். அடுத்து இப்ராஹிம் சத்ரான் 18 ரன்களும், அஸ்மத்துல்லா 10 ரன்களும் சேர்த்தனர். குலாபுதீன் 4, முகமது நபி 1, கரீம் ஜன்னத் 7 ரன்கள் எடுத்தனர்.

கடைசி ஓவரில் ரஷித் கான் இரண்டு சிக்ஸர்கள் அடித்ததை அடுத்து ஆப்கானிஸ்தான் அணி 100 ரன்களை கடந்தது இல்லை எனில் அந்த அணியின் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். ரஷித் கான் 10 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்தார். வங்கதேச அணிக்கு 116 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. வங்கதேச அணியின் நெட் ரன் ரேட் மோசமாக இருந்ததால் அந்த அணியால் அரை இறுதிக்கு முன்னேற முடியாது என்ற கருத்து நிலவிய நிலையில், அந்த அணி 12.1 ஓவரில் 116 ரன்கள் இலக்கை சேஸிங் செய்தால் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை விட கூடுதல் நெட் ரன் ரேட் பெற முடியும். அதன் மூலம் அரை இறுதிக்கு தகுதி பெறும் என்ற நிலை ஏற்பட்டது.

அதனால், இரண்டாம் பாதியின் துவக்கத்தில் வங்கதேசம் வெற்றி பெற்று விடுமோ என்ற பரபரப்பு நிலவியது. பின்னர் ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வங்கதேச அணியின் 10 விக்கெட்களையும் வீழ்த்தியது. இடையே மழை பெய்த போதும் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக பந்து வீசியது. வங்கதேசம் 105 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது.

இதை அடுத்து வங்கதேச அணி சிறிது நேரம் மட்டுமே அரை இறுதி கனவு கண்டு பின் அதல் ஏமாற்றம் அடைந்தது. இந்த வெற்றி மூலம் ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறியது. வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தன.

Story first published: Tuesday, June 25, 2024, 8:08 [IST]
Other articles published on Jun 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+