Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போயும் போயும் "குட்டிப் புலி" காலில் விழுந்தீங்களே டா.. ஆஸ்திரேலியா நிலைமை இப்படி ஆகிப் போச்சே

கிங்ஸ்டவுன்: உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக பார்க்கப்படும் ஆஸ்திரேலியா நெட் ரன் ரேட் அடிப்படையில் அரை இறுதிக்கு முன்னேற வேண்டி "குட்டி புலி" வங்கதேசத்தை நம்பி இருந்தது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் மிக வெளிப்படையாக வங்கதேச அணியின் வெற்றிக்காக காத்துக் கொண்டு இருக்கிறோம் என அந்த அணியை ஊக்கப்படுத்தி பேசி இருந்தார்.

ஆனால், குட்டிப்புலி அணி, ஆப்கானிஸ்தான் அணியிடம் படுதோல்வி அடைந்து தாங்களும் அரை இறுதிக்கு முன்னேறாமல், ஆஸ்திரேலியாவையும் முன்னேற விடாமல் செய்தது. இதை அடுத்து வங்கதேசத்தின் காலில் விழுந்த ஆஸ்திரேலிய அணியை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

T20 World Cup Indian national cricket team Cricket 20 2024

2024 டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் சுற்றில் தான் ஆடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றது. ஆனால், சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடம் தோல்வியடைந்து அரை இறுதி வாய்ப்பை இக்கட்டான நிலைமைக்கு மாற்றிக் கொண்டது. சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின.

இந்த போட்டியில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணி அரை இறுதிக்கு முன்னேற வாய்ப்பு இருந்தது. அதாவது, வங்கதேசம் ஆப்கானிஸ்தானை வீழ்த்தினால் ஆஸ்திரேலியா, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் என மூன்று அணிகளும் தலா இரண்டு புள்ளிகளை பெற்றிருக்கும்.

அப்போது நெட் ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கு அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது. ஆனால், ஆப்கானிஸ்தான் அணியிடம் வங்கதேசம் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த வங்கதேசம் இந்த சிறிய இலக்கை கூட எட்ட முடியாமல் 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அதனால், ஆஸ்திரேலியா அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்தே வெளியேறியது. இதை அடுத்து ஆஸ்திரேலியாவை, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் சேர்ந்து கிண்டல் செய்து வருகின்றனர். உலகின் நம்பர் ஒன் அணியாகவும், வலுவான அணிகளில் ஒன்றாகவும் பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா, சுமாரான அணிகளில் ஒன்றான வங்கதேசத்தின் காலில் விழ வேண்டிய நிலை ஏற்பட்டதை சுட்டிக்காட்டி அவர்கள் கேலி செய்து வருகின்றனர்.

அதிக ஒருநாள் போட்டி உலகக் கோப்பைகளை வென்ற அணியான ஆஸ்திரேலியா, இதுவரை ஒரு முறை மட்டுமே டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்த முறை அரை இறுதிக்கு கூட முன்னேற விடாமல் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ஆஸ்திரேலியாவை வெளியேற்றி உள்ளன.

Story first published: Tuesday, June 25, 2024, 12:05 [IST]
Other articles published on Jun 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+