Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

AFG vs BAN: பாகிஸ்தானுக்கு விழுந்த முதல் அடி.. ஆசியாவிலேயே 2வது சிறந்த அணியாக மாறிய ஆப்கானிஸ்தான்

கிங்ஸ்டவுன்: ஆசியாவிலேயே இரண்டாவது சிறந்த கிரிக்கெட் அணியாக மாறி உள்ளது ஆப்கானிஸ்தான். கடந்த 20 ஆண்டுகளில் ஆசிய அளவில் சிறந்த கிரிக்கெட் அணியாக இந்தியா இருந்து வருகிறது. இரண்டாவது இடத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மாறி மாறி இடம் பெற்று வந்தன.

குமார் சங்ககாரா மற்றும் மகிளா ஜெயவர்த்தனை ஆகியோரின் காலத்துக்கு பின் இலங்கை அணி மோசமான சரிவை சந்தித்தது. அந்த இடைவெளியில் பாகிஸ்தான் அணி ஆசியாவின் இரண்டாவது சிறந்த அணியாக இருந்தது. ஒருநாள் போட்டி உலக கோப்பை மற்றும் டி20 உலக கோப்பைகளில் இந்தியாவுக்கு அடுத்து சிறப்பாக செயல்பட்டு வந்தது. அதிக டி20 போட்டிகளில் ஆடியதால் இந்திய அணியை விட பாகிஸ்தான் அணி சில காலம் முன்னிலையிலும் இருந்தது.

T20 World Cup Indian national cricket team Cricket 20 2024

ஆனால், தற்போது இந்தியா டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆசியாவிலேயே சிறந்த அணியாக உள்ளது. மறுபுறம் பாகிஸ்தான் அணி கடந்த சில ஆண்டுகளில் சரிவை சந்தித்து வந்தது. 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளுமே முதல் சுற்றில் ஒன்பது போட்டிகளில் ஆடி நான்கு வெற்றிகளை மட்டுமே பெற்றன. அதனால், இரண்டு அணிகளும் அப்போது சமநிலையை அடைந்தன.

அடுத்து, 2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியை விட சிறப்பாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது. ஆனால், ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது மட்டுமில்லாமல் அரை இறுதிக்கும் முன்னேறி இருக்கிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற வலுவான அணிகளை ஆப்கானிஸ்தான் வீழ்த்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பைகளில் அடுத்தடுத்து சிறப்பான செயல்பாட்டை அளித்துள்ள ஆப்கானிஸ்தான் அணி ஆசியாவிலேயே இரண்டாவது சிறந்த கிரிக்கெட் அணியாக மாறி உள்ளது.

இது பாகிஸ்தான் அணிக்கு கிரிக்கெட்டில் விழுந்த மிகப்பெரிய அடியாக பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு சொந்த நாட்டில் கிரிக்கெட் மைதானங்கள் ஏதுமில்லை. அந்த நாட்டின் அரசியல் சூழ்நிலையும் பிற அணிகளை அழைத்து இருதரப்பு கிரிக்கெட் ஆடுவதற்கான நிலையில் இல்லை. அதன் காரணமாகவே தற்போது ஆப்கானிஸ்தான் அணி இதுவரை பின்தங்கிய நிலையில் இருந்தது.

இனிவரும் காலத்தில் ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் உள்ள மைதானங்களில் பிற அணிகளை அழைத்து இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் ஆட உள்ளது. இனி வலுவான அணிகளோடு அதிக சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் ஆடும் பட்சத்தில் ஆசியாவில் இந்திய அணிக்கு போட்டியாக ஆப்கானிஸ்தான் மாறும் என எதிர்பார்க்கலாம்.

Story first published: Tuesday, June 25, 2024, 14:03 [IST]
Other articles published on Jun 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+