Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை 2024- 20 நாட்களில் உடைக்கப்பட்ட பல்வேறு சாதனைகள்.. இவ்வளவு நடந்திருக்கா?

ஜமைக்கா : 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. ஜூன் இரண்டாம் தேதி முதல் இந்த தொடர் நடைபெற்று வருகிறது.

20 நாட்கள் முடிந்துள்ள இந்த தொடரில் பல்வேறு சாதனைகள் உடைக்கப்பட்டு இருப்பதாக ஐசிசி அறிவித்திருக்கிறது. இந்த தொடரில் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றும், பவுலர்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

t20 world cup records indian national cricket team cricket 20 2024

இந்த நிலையில் இந்த தொடரில் பல போட்டிகள் ரசிகர்களுக்கு சோர்வை கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ள நிலையில் பல்வேறு ரெக்கார்டுகள் இந்த தொடரில் முறியடிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி உலகக்கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் படைத்திருக்கிறார்.

வங்கதேசத்துக்கு எதிராக மிட்செல் ஸ்டார்க் விக்கெட்டுகளை வீழ்த்திய போது அவர் டி20 உலக கோப்பை வரலாற்றில் 95 விக்கெட் வீழ்த்தி மலிங்காவின் (94) சாதனையை முறியடித்து இருக்கிறார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஷகிபுல் ஹசன் இருக்கிறார். அவர் 92 விக்கெட்டுகளை இதுவரை உலக கோப்பை வரலாற்றில் வீழ்த்தி இருக்கிறார்.

இதேபோன்று சர்வதேச t20 போட்டிகளில் ஒரு ஓவரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக யுவராஜ் சிங் அடித்த 36 ரன்கள் தான் இருந்தது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரான் 36 ரன்கள் ஒரே ஓவரில் அடித்து சாதனை படைத்திருக்கிறார். இந்த நிலையில் டி20 உலக கோப்பை வரலாற்றில் ஏழாவது ஹாட்ரிக் எடுத்த பவுலர் என்ற பெருமையை ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் பெற்று இருக்கிறார்.

இதற்கு முன்பு டி20 உலக கோப்பையில் பிரட்லி, கேம்பர் ஹசரங்கா, ரபாடா, கார்த்திக் மெய்யப்பன்,ஜோஸ் லிட்டில் ஆகியோர் வீழ்த்திய நிலையில் தற்போது பாட் கம்மின்ஸ் வங்கதேசத்துக்கு எதிராக இந்த சாதனையை நிகழ்த்தி இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.
இதேபோன்று டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக பார்ட்னர்ஷிப் அடித்த ஜோடி என்ற பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் ரஹ்மத்துல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சார்ட்ரன் ஆகியோர் உகாண்டாவுக்கு எதிராக 154 ரன்கள் சேர்த்து இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்கள்.

முதல் இடத்தில் கடந்த உலகக்கோப்பை அரை இறுதியில் இங்கிலாந்து ஜோடி அலெக்ஸ் ஹெல்ஸ், ஜாஸ் பட்லர் இந்தியாவுக்கு எதிராக 170 ரன்கள் சேர்த்தது சாதனையாக கருதப்படுகிறது. இது போன்று நடப்பு உலக கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா வீரர் மார்க்கரம் 4 கேட்ச்களை பிடித்து ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் வீரர் படைத்த டேரன் ஷமியின் சாதனையை சமன் செய்திருக்கிறார்.

இதேபோன்று கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்க வீரர் ஆரோன் ஜோன்ஸ் ஒரு இன்னிங்ஸில் 10 சிக்ஸர்கள் விளாசி கெயிலின் சாதனையை சமன் செய்து இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். எனினும இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் 2016 ஆம் ஆண்டு 11 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் கெயில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2007 ஆம் ஆண்டு 10 சிக்சர்கள் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, June 22, 2024, 16:03 [IST]
Other articles published on Jun 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+